பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 159 வில்லை. இதனிடையில் இந்தப் பிள்ளைகளின் தந்தை இறந்து விட்டார். என்றாலும், பிள்ளைகள் சிவனை வணங்குவதில் தீவிரமாக இருந்தனர். இதைக் கண்ட அரக்கன் அவந்தியை முற்றுகையிட்டு இவர்களை அழிக்க முயன்றான். நால்வரும் சிவலிங்கத்திடம் சென்று தங்கள் குறைகளைக் கூறி வேண்டினர். திடீரென்று ஒரு பெரிய சப்தம் கேட்டது. அங்கு வெளிப்பட்ட சிவபெருமான் அரக்கனான துஷ்ணனை எரித்துச் சாம்பலாக்கி விட்டார். அன்றிலிருந்து பக்தர்களின் வேண்டுகோளின்படி மகாகாளர் அங்கேயே தங்கிவிட்டார். 4. ஓம்கார லிங்கம் விந்திய மலை எல்லா மலைகளையும்விடத் தான் உயர்ந்த தாகவும், தன்னிடம் எல்லாப் பொருளும் இருக்கின்றன என்றும் அதிகக் கர்வம் கொண்டிருந்தது. ஒருமுறை நாரதர் அங்கே வந்த பொழுது விந்தியம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டது. உடனே நாரதர், “அதிக கர்வம் பட வேண்டாம். சிவன் வாழ்கின்ற காரணத்தால் மேருமலை உன்னை விட உயர்ந்தது” என்று கூறினார். அதைக் கேட்ட விந்தியம் உடனே சிவனை நோக்கித் தவம் செய்தது. ஆறு மாதம் தவம் செய்த பின் சிவன் வெளிப்பட்டார். விந்தியம் தன்னிடத்தில் சிவன் தங்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டதால் ஓம்கார லிங்கமாக அங்கேயே தங்கிவிட்டார். 5. கேதார லிங்கம் விஷ்ணு ஒருமுறை தன்னையே நரன் என்றும், நாராயணன் என்றும் இரு முனிவர்களாக மாற்றிக் கொண்டார். இமயமலையில் உள்ள பத்ரிகாசரமம்' என்ற இடத்தில் இந்த இரு முனிவர்களும் சிவனைக் குறித்து நெடுங்காலம் தவம் செய்தனர். கடைசியாக சிவன் தோன்றி, “என்னை ஏன் அழைத்தீர்கள்? நீங்களே வணங்கத் தகுந்த