பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பதினெண் புராணங்கள் வர்கள் தானே?’ என்றார். இருவரும் ஆசிரமத்தின் பக்கத்தில் உள்ள கேதாரம் என்னும் மலை உச்சியில் சிவன் என்றும் லிங்க வடிவில் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவர் அவ்விதம் தங்கிய இடமே கேதாரம். அந்த லிங்கத்தின் பெயரே கேதார லிங்கம். 6. பீம சங்கர லிங்கம் சகிய என்ற மலையில் பீமன் என்ற அரக்கனும், அவன் தாயும் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் பீமன் தன் தாயைப் பார்த்து, “நாம் ஏன் தனியாக இங்கு வாழ்கிறோம்? என் தந்தை யார்?' என்று கேட்டான். மிக்க வருத்தத்துடன் தாய் கர்கதி தன் வரலாற்றைச் சொன்னாள். விராதன் என்ற ராட்சச னுக்குத் தான் மனைவியாக இருந்ததாகவும், விராதனை இராமன் கொன்று விட்டபடியால் இராவணன் தம்பியான கும்பகர்ணனைத் தான் மணந்து பீமன் என்ற இப்பிள்ளை யைப் பெற்றதாகவும், இலங்கைக்குச் சென்ற கும்பகர்ணனை இராமன் கொன்றுவிட்டான் என்றும், அதனால் வேறு போக்கிடம் இல்லாமல் காட்டிலே இருப்பதாகவும் கூறினாள். இராமன் விஷ்ணுவின் அவதாரம் ஆகையால், விஷ்ணுவைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பீமன் 1000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மன் வெளிப்பட்டவுடன் அனைவரையும் வெல்லக்கூடிய சக்தி தனக்கு வேண்டுமெனக் கேட்டுக் கொண்டான். அது கிடைத்தவுடன் பக்கத்தில் உள்ள விஷ்ணு பக்தனாகிய அரசன் காமரூபனை வென்று அவனைச் சிறையிலும் அடைத்துவிட்டான். சிறையில் அகப்பட்ட பீமன் சிறைக்குள் வந்து காமரூபனை வாளால் வெட்ட முயன்றான். சிவன் எதிரே தோன்றி தன்னுடைய சூலாயுதத்தால் பீமனுடைய வாளைக் கீழே விழச் செய்தான். பீமன் பயன்படுத்திய எல்லா ஆயுதங்களும், சிவனுடைய