பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 163 உருவம் எடுத்து அவர் ஆசிரமத்திற்குப் பக்கத்தில் வைத்திருந்த தானியத்தைத் தின்னத் தொடங்கிற்று. ஒரு புல்லை எடுத்து கெளதமர் விரட்ட அது அங்கேயே விழுந்து செத்து விட்டது. பசுவதை செய்ததால் கெளதமரையும், அகல்யையையும் அவ்விடத்தை விட்டு விரட்டி விட்டனர். பசுவதைக்குப் பிராயச்சித்தம் செய்ய விரும்பிய கெளதமர், பிரம்ம பர்வதத்தை நூறுமுறை சுற்றி வரவேண்டும் என்றும், இன்னும் சில கடுமையான கடமைகளையும் முனிவர்கள் கூறினார்கள். சொல்லப்பட்ட சடங்குகளை எல்லாம் முடித்தபிறகு கெளதமரும் அகல்யையும் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர். சிவன் தோன்றிய பொழுது, தங்களுடைய ஆசிரமத்திற்குப் பக்கத்தில் கங்கைநதி ஓட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். உடனே கங்கை, சிவனும் பார்வதியும் இங்கே தங்குவதானால் தான் இங்கே ஒடுவதாக ஒத்துக் கொண்டாள். சிவன் தங்கிய இடம் திரியம்பகம் என்று போற்றப்பட்டது. கோதாவரி என்ற பெயருடன் கங்கை அங்கே ஒடிக் கொண்டிருக்கிறது. கொடுமை செய்த முனிவர்களையும், அவர்கள் பத்தினிமார்களையும் மன்னிக்குமாறு கெளதமர் வேண்டிக் கொண்டார். 9. இராவணனும் வைத்தியநாதனும் இராவணன் இமயமலையில் பலகாலம் தவம் புரிந்தான். சிவன் வெளிப்படவில்லை. இன்னும் தெற்கே வந்து விருட்ச கந்தகம் என்னும் இடத்தில் தவம் புரிந்தான். அங்கும் வெளிப் படவில்லை. இன்னும் தெற்கே வந்து ஒரு பெரிய குழியைத் தோண்டி அதனுள் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அப்போதும் சிவன் வெளிப்படவில்லை. இது கண்ட இராவணன் உயிரோடு இருந்து பயனில்லை என்று நினைத்துப் பெரிய தீயை வளர்த்து தன் ஒவ்வொரு தலையாக