பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

甘66 பதினெண் புராணங்கள் இராமன் வேண்டிக் கொண்டதால், இராமலிங்கமாக சிவன் அங்கேயே தங்கிவிட்டார். 12. குஷ்மேஸ் லிங்கம் தென்பகுதியில் சுதர்மா என்ற பிராமணன் சுதேஹா என்ற தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். நீண்ட காலமாக இருவருக்கும் குழந்தையில்லை. எனவே அவன் வருத்தத்தை விட அவள் வருத்தம் பெரிதாக இருந்தது. பிற பெண்கள் அவளைக் கேலி செய்யத் தொடங்கினர். அதனால் வருத்தம் அடைந்த அவள் தன் உறவினராகிய குஷ்ணா என்பவளை அவன் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினாள். கதர்மா "அப்படியே மணம் புரிந்து கொண்டு அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால், நீ அதனைத் தாங்க மாட்டாய், பொறாமையால் மிகவும் துன்புறுவாய்” என்று கூறித் தடுத்தான். “அது பற்றிக் கவலை வேண்டாம். நான் தானே இதை முன்னின்று செய்கிறேன்” என்று கூறிவிட்டு, குஷ்ணாவை இரண்டாம் தாரமாக மணமுடித்து வைத்தாள். குஷ்ணா பெரிய சிவ பக்தை தினமும் களி மண்ணால் 108 சிவ லிங்கங்கள் செய்து அவற்றைப் பூசை செய்துவிட்டு, பக்கத்தில் உள்ள குளத்தில் லிங்கங்களைப் போட்டு விடுவது அவள் வழக்கம். இவ்வாறு ஒர் இலட்சம் லிங்கங்களைப் பூசை செய்து குளத்தில் போட்டிருந்தாள். உரிய காலத்தில் ஒர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர வளர முதல் மனைவியின் மனத்தில் பயங்கரமான பொறாமை உருவெடுத்தது. இதன் முடிவில் ஒரு நாள் மூத்தவள் குழந்தையின் கழுத்தை வெட்டி அந்த உடலைப் பக்கத்தில் உள்ள குளத்தில் போட்டு விட்டாள். மறுநாள் விழித்ததும் என்ன நடந்ததென்றே தெரியாமல் பூஜை செய்யத் தொடங்கி