பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பதினெண் புராணங்கள் சந்திரசேகரன் முன்னொரு காலத்தில் பார்வதி சிவனைப் பார்த்து உங்கள் நெற்றியில் இருக்கும் சந்திரன் எப்படி அங்கே வந்தான் என்று எனக்குச் சொல்ல முடியுமா என்று வினவினாள். உடனே சிவன் அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். பார்வதி முற்பிறப்பில் சதி என்ற பெயருடன் தட்சனின் மகளாகப் பிறந்திருந்தார். தட்சன் யாகத்திற்குச் சென்ற சதி அவனால் அவமானப்படுத்தப்பட்டு அங்கேயே உயிரை நீத்தார். சதியை இழந்த சிவன் இங்குமங்குமாக அலைந்தார். அங்கு கடுமையான தவம் மேற்கொண்டார். அவருடைய கடுமையான தவத்தினால் மரம், செடி, கொடிகள் ஆகிய அனைத்தும் எரிந்து சாம்பலாயின. மலைகளும் இதில் அடங்கும். தேவர்கள் எல்லாம் கூடி பிரம்மனிடம் இந்நிலையை எடுத்துக் கூறினர். பிரம்மன் சந்திரனை அமுத கலசத்திற்குள் போட்டு, அந்தக் கலசத்தையும், வேறொரு கலசத்தில் விஷத்தையும் நிரப்பிக் கொண்டு சிவனிடம் சென்றார்கள். சிவனிடம் இந்த இரண்டு கலசங்களிலும் இன்னதென்று சொல்லாமல் இந்த இரண்டு கலசங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றார். சிவன் முதலில் அமுத கலசத்தை எடுத்துக் குடித்தார். அதனுள் இருந்த சந்திரன் திடீரென்று சிவனுடைய நெற்றியில் ஒட்டிக் கொண்டு அவரைக் குளிர்ச்சியடையச் செய்தான். விஷக் கலசத்தில் ஒரு விரலை நனைத்துச் சிவன் தொண்டை யில் தொட்டார். உடனே அந்த இடம் நீல நிறமாக மாறி விட்டது. அதிலிருந்து சிவனுக்கு நீலகண்டன் என்று பெயர் வந்தது. நெற்றியில் ஒட்டிய சந்திரன் ஒர் அணியைப் போல இருப்பதால் சிவனுக்குச் சந்திரசேகரன் என்ற பெயர் ஏற்பட்டது.