பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் f79 களையும் மறுபடியும் உயிர்ப்பித்தார். இதைக் கண்ட சிவன் சுக்ராச்சாரியாரை விழுங்கியவுடன் இறந்தவர் உயிர்பெறும் சூழ்நிலை மாறிவிட்டது. இந்திரனுடைய பாணங்கள், விஷ்ணுவின் கதாயுதம் ஆகியவை இவனை ஒன்றும் செய்யாமல் போகவே, சிவன் படைகளை அந்தகன் மீது ஏவினார். அவனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் கீழே விழுந்தவுடன் ஒவ்வொன்றும் ஒரு அந்தகனாக உருவாயிற்று. அப்பொழுது சிவன் காளியைப் படைத்து அந்தகாசுரனின் இரத்தம் ஒரு சொட்டுக் கூடக் கீழே விழாதபடி குடிக்கச் செய்தான். இந்த நிலையில் சிவன் தன்னுடைய திரிசூலத்தை அந்தகாசுரன் மேல் செலுத்தி அவனைக் கொன்றார். போருக்குப்பின் சுக்ராச்சாரியாரைத் தன் வயிற்றில் இருந்து எடுத்துச் சிவன் வெளியே விட்டு விட்டார். ருருவின் கதை முன்னொரு காலத்தில் ருரு என்றொரு அரக்கன் இருந்தான். அவன் தற்செயலாக ஒருமுறை பார்வதியைப் பார்த்துவிட்டு அவளையே தான் மணம் புரிய வேண்டும் என்று கடுந்தவம் இயற்றினான். தவத்தின் முடிவில் வந்த பிரம்மன், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ருரு, ‘நான் பார்வதியை மணந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார். 'இது என்னால் முடியக் கூடிய காரியம் அன்று என்று பிரம்மன் போய் விட்டார். ருருவின் தவம் தொடர்ந்தது. அந்தத் தவத்தின் கடுமையில் வெளிப்பட்ட உஷ்ணம் சுற்று வட்டாரம் முழுவதையும் எரித்தது. ருரு தங்கியிருந்த மலையம் என்ற மலையும் எரியத் துவங்கியது. அந்தச் சூடு மேருவைத் தாக்கவே சிவனும் பார்வதியும் கூட ஒட வேண்டியதாயிற்று. அப்போது பார்வதி சிவனைப் பார்த்து, நாம் ஏன் ஒடுகிறோம் என்று கேட்டாள். சிவன்,