பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 - பதினெண் புராணங்கள் ருரு என்ற அசுரன் உன்னை மணந்து கொள்வதற்காகக் கடுந்தவம் புரிகிறான். அதன் விளைவுதான் இது என்று கூறிய வுடன் பார்வதி உடனே இதற்கு ஏதாவது செய்யுங்கள் என்றாள். அதைக்கேட்ட சிவன், பார்வதி! இது உன் சம்பந்தமான விஷயம். நீதான் ஏதாவது செய்ய வேண்டும்' என்று கூறியவுடன் பார்வதி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு சிங்கமும் யானையும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சிங்கத்தைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக் கொண்டாள். சிங்கத்தின் குருதி வடிந்ததால் தலையும், முடியும் ரத்தத்தால் சிவந்தது. இந்த வடிவுடன் பார்வதி ருருவிடம் சென்று, ருரு! என்னை மணக்க வேண்டும் என்று தானே தவம் செய்கிறாய். இதோ நான் வந்து விட்டேன். என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, ருரு கண்ணை விழித்துப் பார்த்தான். “நீ யார் என்று எனக்குத் தெரியாது. மகா கோர சொரூபியாய் இருக்கிறாய். பார்வதியின் சந்திரபிம்ப முகமும், தாமரை போன்ற கைகளும் கால்களும் உனக்கில்லை. உன் உருவத்தை நீயே பார்த்துக் கொண்டால் உன் சொரூபம் தெரியும்” என்று கூறிவிட்டுப் பார்வதியை கதாயுதத்தால் சாடினான். சினம் கொண்ட பார்வதி ருரு எறிந்த பல்வேறு ஆயுதங் களையும் தடுத்து விட்டுத் தன் பல்லாலும், கையாலும் அவனைக் கொல்ல முயன்றாள். இப்பொழுது ருருவின் உடலிலிருந்து பல்வேறு உருவங்கள் தோன்றின. பார்வதி தன் அம்சமான பல சக்திகளைப் படைத்தாள். அந்தச் சக்திகள் ருருவின் வடிவிலிருந்த பல்வேறு அசுரர்களைத் தின்று தீர்த்தன. பயந்த ருரு, பூலோகம், சொர்க்க லோகம், பாதாள லோகம் ஆகிய இடங்களுக்கு ஓடினான். பார்வதி அவனை எல்லா இடங்களிலும் துரத்தி வரவே ருரு ஒன்றும் செய்ய முடியாமல் நின்று விட்டான். பார்வதி அவன் உடலைக் கிழித்து