பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயு புராணம் 183 பிராமணர்கள் மன்னனிடம் வந்து உங்கள் தந்தை பிராமணர் களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைத் தேடிக் கொண்டார். நீ ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று கேட்டனர். சகஸ்ரநிகா அவர்களைப் பார்த்து தானத்தைப் பெற்றுக் கொண்டு என் தந்தைக்குப் புண்ணியம் தேடித் தந்தவர்களே. இப்பொழுது என் தந்தை எங்கிருக்கிறார் என்று சொல்ல முடியுமா என்று கேட்டான். அது முடியாது என்று அறிந்த பிராமணர்கள் எப்படியாவது அரசனைத் திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக, பார்க்கவ முனிவரைத் தேடிச் சென்று இறந்த அரசன் எங்கிருக்கிறார் என்பதை அவர் தவ வலிமையால் அறிந்து சொல்லுமாறு கேட்டனர். பார்க்கவ முனிவர் சூரியனின் உதவியை நாடினார். சூரியன் அவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான். வழியில் ஒரு பிராமணன் பார்க்கவரைத் தடை செய்தான். நான் இறப்பதற்கு முன்னால் நீர் எனக்கு ஒரு பொற்காசு தரவேண்டியுள்ளது. அதை இப்பொழுது கொடுத்தால் ஒழிய மேலே போக விடமாட்டேன் என்றான். பார்க்கவரிடம் காசு இல்லாததனால் அவர் புண்ணியத்தைச் சிறிது பெற்றுக் கொண்டு மேலே அனுப்பினான். கடைசியாக நரகத்தின் மிக ஆழமான இடத்தில் இறந்து போன அரசன் பெருந் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். ஆச்சரியப்பட்ட முனிவர் அரசனைப் பார்த்து, 'நீ பிராமணர்களுக்கு தானம் செய்து பெரும் புண்ணியத்தைச் சேகரித்தாய் என்றல்லவா கேள்விப் பட்டிருந்தேன். உனக்கு ஏன் இந்த கதி? என்று கேட்டார். அரசன், 'உழைக்கும் ஏழை மக்களிடம் வரி என்ற பெயரில் அநியாயமாகப் பணத்தை சம்பாதித்து, புண்ணியம் சம்பாதிக் கலாம் என்ற நம்பிக்கையில் பிராமணர்களுக்குக் கொடுத்தேன். எவ்விதப் புண்ணியமும் எனக்கு வரவில்லை. ஆனால் இந்த வரியைக் கொடுப்பதற்குப் பாடுபட்ட அந்த ஏழை மக்களின்