பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பதினெண் புராணங்கள் என்பதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விளக்கியதே ரிஷப அவதாரத்தின் நோக்கமாகும். முனிவர்களும், ரிஷிகளும் விஷ்ணு ஒர் அரசனாகப் பிறந்து பூமியைப் பயனுள்ள இடமாகச் செய்ய வேண்டும் என வேண்ட, பிருத்து என்ற மன்னனாகத் தோன்றிய அவதாரம் ஒன்பதாவது அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தில் வெறுந்தரையாக இருந்த பூமி தானியங்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் இடமாகப் பிருத்து மன்னன் செய்தார் என்பதும், அதனால் இந்த பூமிக்குப் பிருத்வி என்ற பெயர் வந்தது என்பதும் சொல்லப் பட்டுள்ளன. பத்தாவது, மச்ச அவதாரம் ஆகும். சாக்கூச மன்வந் திரத்தில், வைவஸ்வத மனுவின் காலத்தில் ஜலப் பிரளயத்தால் பூமி முழுவதும் நீரில் மூழ்கி இருந்த பொழுது தோன்றியது மச்ச அவதாரம். இந்த மீன், வைவஸ்வத மனுவிடம், ஒரு பெரிய படகைக் கட்டி அதில் அவனும், ஏனைய மக்களும் ஏறிக்கொண்டு தப்பிக்க வேண்டும் என்று கூறி உலகைக் காத்தது. பதினொன்றாவது கூர்ம அவதாரம். தேவர்களும், ராட்சசர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுப்பதற் காக வாசுகியை நாணாகவும், மந்திரமலையை மத்தாகவும் பயன்படுத்த முயன்ற பொழுது, மத்தைத் தூக்கிப் பிடிக்க கூர்ம வடிவம் எடுத்துத் தன் முதுகின் மேல் அந்த மத்தைத் தாங்கினார். பன்னிரண்டாவது தன்வந்திரி அவதாரம். பாற் கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட பல்வேறு பொருள்களும் போகக் கடைசியாக அமிர்த கலசத்தைக் கையில் ஏந்திக் கொண்டு வெளிப்பட்டவர் தன்வந்திரி. பதின்மூன்றாவது அழகிய பெண்ணாக (மோகினி) எடுத்த அவதாரம். பாற்கடலைக் கடையத் தாங்களும் உதவியதால் தங்களுக்கும் அமிர்தத்தில் பங்கு வேண்டும் என்று ராட்சசர்கள்