பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 193 இருந்தது. அது என்ன குறை என்று அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நிலையில் நாரதர் உள்ளே நுழைந்தார். வேதவியாசரைப் பார்த்து, "மாபெரும் சாதனை களைப் படைத்த தாங்கள் ஏன் அமைதியில்லாமல் இருக்கிறீர்கள்” என்று கேட்டார். வேதவியாசர், “காரணம் தெரியாமல்தான் கவலைப்படுகிறேன். அனைத்தையும் அறிந்த தாங்களே அதை விளக்கிச் சொல்லலாமே” என்று கூறினார். அடுத்துப் பேச ஆரம்பித்த நாரதர், வேதவியாசரே! இதுவரை தர்மத்தைப் பற்றி அளவுக்கு மிஞ்சிக் கூறிவிட்டீர்கள். அது தருமத்தின் இலக்கணத்தையும், அதன் இயல்பையும் சொல்கின்றன. ஆனால் மக்கள் மனத்தில் இவை சென்று தங்குவது கடினம். தர்மத்தின் இலக்கணங்களை எழுதுவதைக் காட்டிலும், கிருஷ்ணனுடைய லீலைகளைச் சொல்லி இருந்தால் அது மக்கள் மனத்தைச் சென்று பற்றும். அந்தச் சூழ்நிலை ஏற்படும்போது தருமத்தைப் பற்றிய கருத்துக்களும் மக்கள் மனத்தில் புகுந்து தங்கும். ஆகவே கிருஷ்ணனைப் பற்றிச் சொல்வதுதான் சிறந்த வழியாகும் என்று கூறிப் போனார். நாரதர் கூறியவை வியாசரின் மனத்திற்கு அமைதியும், தூண்டுதலும் தந்த காரணத்தால் பாகவத புராணத்தைப் பாடி அதைத் தம் மகனாகிய சுகதேவனுக்குக் கற்பித்தார். அசுவத்தாமன் பெற்ற தண்டனை குருகூேடித்திரப் போரில் கெளரவர் படையிலும், பாண்டவர் படையிலும் பல்லாயிரக் கணக்கானோர் மடிந்தனர். இறுதியாக பீமனுக்கும், துரியோதனனுக்கும் தனிப் போர் நடந்தது. பீமன், துரியோதனன் தொடையில் கதையால் தாக்கி அவன் காலை ஒடித்து விட்டான். ஒடிந்த காலுடன் துரியோதனன் யுத்தகளத்தில் படுத்திருந்தான். துரோணர் ш.ц.-13