பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t06 பதினெண் புராணங்கள் கிருஷ்ணன் துவாரகைக்கு வந்தபின் சில மாதங்கள் கழித்து, அருச்சுனன் துவாரகைக்கு வந்தான். ஏழு மாதங் களாகியும் அவன் அஸ்தினாபுரம் திரும்பவில்லை. இதனிடையே அஸ்தினாபுரத்தில் பல தீய உற்பாதங்கள் தோன்றின. பருவங்கள் உரிய காலத்தில் வரவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, காழ்ப்புணர்ச்சியோடு போரிட்டுக் கொண்டனர். மனம் நொந்து போன யுதிஷ்டிரன் அருச்சுனன் திரும்பி வராமை கண்டு கவலை கொள்ளத் துவங்கினான். பீமனை துவாரகைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்தான். பீமன் புறப்படுவதற்குள் அருச்சுனனே வந்துவிட்டான். வந்தவன் எல்லையற்ற சோகத்தில் ஆழ்ந்த வனாய்த் தனித்திருந்து கண்ணிர் வடித்துக் கொண்டே இருந்தான். அவன் மெளனத்தைக் கலைக்க தருமன் பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை. ஒரு நாள் "அருச்சுனா நீ ஏன் பேச மறுக்கிறாய்? ஏன் கண்ணிர் வடிக்கிறாய்? துவாரகையில் நம் உறவினர்களும், கிருஷ்ணனும் நலமாக உள்ளார்களா?” என்று கேட்க, அருச்சுனன், கிருஷ்ணன் இறந்துவிட்டதையும், யாதவ குலம் முழுவதும் அழிந்து விட்டதையும் கூறிக் கதறிவிட்டான். கிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி காதில் விழுந்த உடனேயே யுதிஷ்டிரனுக்கு அரசாட்சியின் மேல் வெறுப்பு உண்டாயிற்று. பாண்டவர்களும், திரெளபதியும் இமயம் சென்று தவம் புரிய முடிவு செய்தனர். பரிட்சித்துக்கு முடிசூட்டி அரசாட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, இந்த அறுவரும் இமயம் நோக்கிப் புறப்பட்டனர். பரிட்சித்து மன்னனின் கதை பாண்டவர்கள் சென்ற பிறகு பலம் பொருந்திய பரிட்சித்து உலகை ஆளத் தொடங்கினான். அவனுக்கு ஜனமேஜெயன்