பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பதினெண் புராணங்கள் சிவனின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். யாக குண்டத்தின் எதிரே உயிர் நீத்த சதி இமவானுக்கும், மேனகைக்கும் மகளாகப் பிறந்து சிவனையே மணம் செய்து கொண்டார். தட்சன் யாகம் தொடர்ந்தது. சிவபெருமானை வரவேற்று விஷ்ணுவே ஆச்சாரியனாக இருந்து யாகத்தை முடித்துக் கொடுத்தார். (பாகவத புராணத்தில் இத்தப் பகுதியில் துருவன் கதை விரிவாகப் பேசப்படுகிறது. முன்னரே விஷ்ணு புராணத்தில் இக்கதை பேசப்பட்டுள்ளதால் அதில் இடம் பெறாத பகுதி மட்டும் இங்கு தரப்பட்டுள்ளது.) விஷ்ணுவிடம் வரம் பெற்ற துருவனுக்கு விஷ்ணு பின் வருமாறு கூறினார். “நீ இன்னும் உலகில் இருந்து திருமணம் செய்து கொண்டு மகப்பேறு பெற்று 36,000 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த சித்திகள் எல்லாம் உன்னை வந்து அடையும். எனவே நீ இப்பொழுது உன் தந்தையிடம் செல்லலாம்” என்று கூறினார். அதன்படியே ஊருக்கு மீண்ட துருவனைக் கண்டு அவனுடைய தந்தையும், தம்பி உத்தமனும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். உத்தான பாதன் அரசுப் பொறுப்பை துருவனிடம் விட்டுவிட்டுத் தவம் செய்யக் காடு சென்று விட்டான். துருவன் ஆட்சிக்காலத்தில் அவன் தம்பி உத்தமன் வேட்டையாடச் சென்ற பொழுது ஒரு யட்சனால் கொல்லப்பட்டான். சீறி எழுந்த துருவன் பெரும் படையுடன் சென்று யட்சர்களை எதிர்த்தான். மாயப் போரில் வல்ல யட்சர்களின் மாயை எல்லாம், நாராயண அஸ்திரத்தின் துணைகொண்டு வென்றான். போர் நீடிக்கவே தேவர்களும் முனிவர்களும் துருவனைச் சமாதானப்படுத்திப் போரை நிறுத்தினர். முனிவர்கள் துருவனைப் பார்த்து விஷ்ணுவின் ஆணையால்தான் உன் தம்பி கொல்லப்பட்டான். அதுவும்