பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பதினெண் புராணங்கள் இந்த மாயையில் இருந்து வெளிவர நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க நாரதர், அரசே! நான் இப்பொழுது சொல்லப் போகும் புரஞ்சனன் கதையைக் கேளும். மாயை யினின்று மீள்வதற்கு உமக்குத் தெளிவான வழி கிடைக்கும்." என்று கூறிக் கதையினைச் சொல்லத் துவங்கினார். பாஞ்சால நாட்டு மன்னன் புரஞ்சனன் என்பவன் தான் தங்கி வாழ்வதற்குரிய சிறந்த இடம் தேடி ஊர் ஊராக அலைந்தான். அவனுக்கு ஒரே ஒரு நண்பன் இருந்தான். ஆனால் அந்த நண்பனுடைய பெயரைக் கூட யாரும் அறியார்கள். புரஞ்சனன் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியாக இமயத்தின் அடிவாரத்தில் ஒர் அழகிய நகரைக் கண்டான். கோட்டை, கொத்தளம், அகழி என்பவற்றோடு இயற்கை வளம் நிறைந்த அந்த நகரத்தில் வீடுகள் எல்லாம் வெள்ளியும் மணியும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அந்த நகரைப் பார்த்து ஆசைப்பட்ட புரஞ்சனன் அதனுள்ளே செல்ல, அங்கு ஒர் அழகிய பெண்ணைப் பார்த்தான். பத்து வீரர்கள் அவளைக் காவல் காத்து நின்றனர். அவர்கள் இல்லாமல் ஒர் ஐந்தலை நாகம் அவளுக்குக் காவலாக இருந்தது. அவள்மேல் காதல் கொண்ட புரஞ்சனன் அவளை மணக்க விரும்பி அவள் சம்மதத்தைக் கேட்டான். அவள், அவன் அந்த நகரத்தை விட்டுப் போகாமல் இருப்பதானால் அவனை மணம் செய்து கொள்வதாகக் கூறினாள். மணம் நடைபெற்றது. புரஞ்சனன் நூறு ஆண்டுகள் அவளோடு வாழ்ந்தான். பல பிள்ளைகளையும் பெண்களையும் பெற்ற அவன் தளர்ந்து மூப்பு வந்ததால் இறக்கையில் கூடத் தன் அழகிய மனைவியை நினைத்துக் கொண்டே இருந்தான். நரகத்தில் சென்று துன்பங்களை அனுபவிக்கும்போது கூடப் பெண்ணை மறக்காமல் இருந்ததால், மறு ஜென்மத்தில்