பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பதினெண் புராணங்கள் போட்டுவிட்டுப் போய்விட்டாள். நல்ல வேளையாக அவ்வழியே வந்த யயாதி மன்னன் நீர் குடிக்கலாம் என்று கிணற்றுக்குள் பார்க்க, உள்ளே கிடந்த தேவயானியைக் காப்பாற்றி அவளை மணம் செய்துகொள்ள ஒப்புக் கொண்டான். உயிருடன் மீண்ட தேவயானி தந்தை சுக்ராச்சாரியாரிடம் நடந்தவற்றைச் சொல்ல, அவர் நாட்டை விட்டே புறப்பட ஆயத்தமானார். குரு நாட்டை விட்டுப் போவதால் ஏற்படக் கூடிய விளைவை அறிந்து நடுக்கமுற்ற விருஷபர்வா, உடனே ஒடிவந்து குருவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவன் மகள் சர்மிஷ்டா தன் மகள் தேவயானிக்குப் பணிப்பெண்ணாக இருக்க ஒப்புக் கொண்டால் நாட்டிலேயே இருப்பதாக சுக்ராச்சாரியார் ஒப்புக் கொண்டார். யயாதி இப்பெண்கள் இருவரையும் மணந்து கொண்டான். தேவயானிக்கு யாது. துர்வாசு ஆகிய இரு மகன்களும், சர்மிஷ்டாவிற்குத் துருயா, புரு ஆகிய மகன்களும் பிறந்தனர். துஷ்யந்தனும், சகுந்தலையும் பரிட்சித்து மன்னன் சந்ததியில் வந்தவன் துஷ்யந்தன். காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது கன்வ முனிவர் ஆசிரமத்தில் சகுந்தலை என்ற அழகிய பெண்ணைக் கண்டு காமுற்றான். விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்தவள் அவள் என்று தெரிந்து அவளோடு கந்தர்வ மணம் செய்து கொண்டு, விரைவில் அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு நாட்டிற்கு வந்தவன், அவளை மறந்தே போனான். நீண்ட நாள் கழித்துத் தன் பிழையை உணர்ந்து ஆசிரமம் வந்து மனைவியையும், குழந்தை பரதனையும் அழைத்துச் சென்றான். துஷ்யந்தனுக்குப் பிறகு பட்டம் பெற்ற பரதன் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான்.