பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 229 துவாரகையின் தோற்றம் கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் இரு மனைவி களையும் பெற்றவன் ஜராசந்தன் என்னும் மகதப் பேரரசன். மருமகனைக் கொன்றதற்காக யாதவர்களைப் பழிவாங்க நினைத்து மாபெரும் சேனையுடன் புகுந்து பதினேழு முறை சூழ்ந்து கொண்டும், வெற்றியடைய முடியாமல் தோற்றே ஒடினான். பதினெட்டாவது முறையாகத் தான் மட்டும் படை யெடுத்து யாதவர்களை அழிக்க முடியாது என்று அறிந்து கொண்ட ஜராசந்தன், காலயவனன் என்ற அரசனின் துணையை நாடினான். போர்க்களத்தில் யாராலும் தனக்குச் சாவு வரக் கூடாது என்ற பெரு வரத்தை மகாதேவனிடம் பெற்றிருந்தவன் காலயவனன். ஜராசந்தனுக்குத் துணையாகக் காலயவனன் வருகிறான் என்றறிந்த கிருஷ்ணன் மகாதேவனின் வரத்தை தான் வெல்ல முடியாது என்பதை அறிந்து கடலின் நடுவே துவாரகை என்ற அழகிய நகரை, விஸ்வகர்மா உதவியோடு ஸ்தாபித்தான். யாதவர்கள் அனைவரும் அங்கே குடியேற்றப்பட்டனர். ஜராசந்தன் முடிவு குருக்ஷேத்திர சண்டைக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது. இந்திரப் பிரஸ்த்தம் பாண்டவர்களுக்கு என்று திருதராஷ் டிரனால் கொடுக்கப்பட்ட பிறகு இந்திரபிரஸ்த்தத்தை ஸ்தாபித்து, யுதிஷ்டிரன் ஆட்சி செய்து வந்தான். சிலகாலம் கழித்து, கிருஷ்ணன் துவாரகையில் இருந்து இந்திரப் பிரஸ்த்தம் வந்து சேர்ந்தான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் யுதிஷ்டிரன் ஒரு ராஜதுய யாகம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கிருஷ்ணனிடம் சொல்லி அவன் கருத்து என்ன என்று கேட்டான். இது நியாயமானதுதான் என்று கூறிய