பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பதினெண் புராணங்கள் கிருஷ்ணன், ராஜதுய யாகம் செய்வதானால், யுதிஷ்டிரனுக்கு சமமான அரசர்கள் யாரும் இருக்கக் கூடாது. அனைவரையும் வென்று அடிமைப்படுத்திய பின்புதான் ராஜதுய யாகம் செய்யப்பட வேண்டும் என்று கூறினான் கிருஷ்ணன், 'உங்களைப் பொறுத்தவரை எதிர்த்துப் போர் புரியவேண்டிய ஒரே ஒர் அரசன்தான் இருக்கிறான். அவன் மகத நாட்டு அரசனான ஜராசந்தன். அவனைக் கொல்வது அவ்வளவு எளிதல்ல. ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் செய்யும் போரில்தான் அவனைக் கொல்ல முடியும் என்று கூறிய கிருஷ்ணன், சகாதேவனையும் நகுலனையும் வடக்குத் திசையில் அனுப்பிவிட்டு, கிருஷ்ணன், அருச்சுனன், பீமன் ஆகிய மூவரும் கிழக்கே மகத நாடு சென்றனர். மூவரும் பிராமணர்கள் போல் வேடம் தரித்துக் கொண்டு ஜராசந்தனிடம் யாசகம் கேட்கச் செல்வது போல் சென்றனர். பிராமணர்கள் யாசகம் கேட்டால் தவறாமல் கொடுக்க வேண்டும் என்பது அக்கால மரபு. அம்முறையில், இம் மூவரும் தங்களுக்கு ஒன்று வேண்டும் என்று ஜராசந்தனிடம் கேட்டார்கள். அவர்கள் மூவரையும் எளிதாக அடையாளம் கண்டு கொண்ட ஜராசந்தன் என்ன வேண்டும் என்று கேட்டான். எங்களில் யாராவது ஒருவருடன் நீ போர் புரிய வேண்டும். அதுதான் நாங்கள் கேட்கும் யாசகம் என்றார்கள். அதனை ஒப்புக்கொண்ட ஜராசந்தன், 'நான் கிருஷ்ணனுடன் போர் புரியமாட்டேன். அவன் கோழை. எனக்கு பயந்துகொண்டு மதுராவைக் காலி செய்து கொண்டு, துவாரகைக்கு ஒடிவிட்டான். அருச்சுனன் என்னைவிட இளையவன். பீமன் எனக்குச் சமமானவன். ஆதலால் அவனுடன் போர்புரிகின்றேன்' என்றான். மறுநாள் ஜராசந்தனுக்கும். பீமனுக்கும் போர் தொடங்கியது. முதலில் இருவரும் கதாயுதம் ஏந்திப் போர்