பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV மறையத் தொடங்கிய இந்து சமயத்திற்கு ஒரு மறுமலர்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுருக்கமாக இருந்த புராணக் கதைகளுக்கு வடிவு கொடுக்க குப்தர்கள் முயன்றிருக்க வேண்டும். குப்தர்கள் காலத்தில் சாணக்கியன் முதலான பிராமணர்களுக்கு அளவு மீறிய செல்வாக்கு தரப்பட்டிருந்ததை வரலாற்றில் அறியலாம். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி குப்தர் காலத்துப் பிராமணர்கள் இப்புராணங்களைப் பழைமையோடு புதிய பல பகுதிகளைச் சேர்த்து விரிவாகப் பாடியிருக்க வேண்டும். புராணங்களுக்குத் தனி மகத்துவம் இருந்தமை யாலும், அதில் சொல்லப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்ததாலும் எல்லாப் புராணங்களிலும் வர்ணாஸ்ரமப் பகுதி மிகுதியாகப் புகுத்தப்பட்டது. இவ்வாறு, வடமொழி பலருக்கும் தெரியாத காரணத்தால் எதை வேண்டுமானாலும் அதில் புகுத்தலாம் என்ற நிலை அன்றிருந்தது என நினைக்க வேண்டியுள்ளது. அதேபோல வடமொழியில் உள்ளதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதும் இக்காலத்தில் கூட இத்தகைய தவறுகள் வேண்டுமென்றே செய்யப்படுகின்றன என்பதற்கு ஒர் உதாரணத்தைக் காணலாம். அரசர்களுடைய அவையிலும், முனிவர்களிடையேயும் கூட சூதர்கள் என்ற ஒரு இனத்தவர் உண்டு. இவர்கள் நால்வகை வர்ணத்திலும் சேராதவர்கள். ஒரு பிராமணப் பெண்ணிற்கும், பிராமணர் அல்லாத தந்தைக்கும் பிறந்தவர்களே சூதர்கள் என்றழைக்கப் பட்டவர்கள். வேதவியாசரின் சீடரும், பல புராணங்களை முனிவர்களிடையே புராணப் பிரசங்கம் செய்யும் லோம ஹர்ஷனர் என்ற முனிவரும் சூதரினத்தைச் சேர்ந்தவரே 让jfTQ禺了。