பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பதினெண் புராணங்கள் வெட்கப்பட்டுக் கொண்டு பூரீதமா ஊருக்குத் திரும்பினான். ஊரில் அவன் வீடு இருந்த இடத்தில் பெரியதொரு தோட்டம் அதன் நடுவே ஒரு மாளிகை. எல்லாவிதமான வசதிகளுடன் கூடிய வாழ்க்கையில் அவன் மனைவி இருப்பதைக் கண்டான். கிருஷ்ணன் சொல்லாமலே இத்தனையும் செய்துவிட்டான் என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தான். சிவனின் தருமசங்கடம் விருகா என்ற அசுரன் ஒருமுறை நாரதரிடம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் எளிதாக வரம் கொடுப்பார்கள் என்று கேட்டான். நாரதர் சிவன்தான் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். உடனே விருகாவும் கேதாரம் என்ற இடத்திற்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான். தன் இடுப்பு வரை நெருப்பில் நின்று ஒரு வாரம் தவம் செய்தும் சிவன் வரவில்லை. உடனே அவன் கோடரியை எடுத்துத் தன் கழுத்தை வெட்டி நெருப்பில் போட வேண்டும் என்ற நினைப்பில் கோடரியை எடுத்தவுடன் சிவன் எதிரே தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். “நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும். அப்படி ஒரு வரம் வேண்டும்” எனக் கேட்டான். சிவன், "அப்படியே தந்தேன்” என்றார். உடனே அந்த அசுரன் “உம்முடைய தலையிலேயே கை வைத்து வரம் உண்மையா என்று சோதிக்கப் போகிறேன்” என்றான். வேறு வழி இல்லாமல் சிவன் ஒடத் தொடங்கினார். நிலைமையை அறிந்த விஷ்ணு மாறுவேடத்தில் வந்து, 'விருகா, நீ எங்கே ஒடுகிறாய்? என்று கேட்டார். அவன் நடந்தவற்றைக் கூறி, "சிவன் தலையில் கையை வைத்து அவரைக் கொன்று விட்டுப் பார்வதியை மணந்து கொள்ளப் போகிறேன்” என்றான். மாறுவேடத்தில் இருந்த விஷ்ணு, அட