பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பதினெண் புராணங்கள் பரிட்சித்து மன்னன் மகனுக்குத் தட்சகன் மேல் பெருங் கோபம் உண்டாயிற்று. தட்சகனை மட்டுமல்லாமல் பாம்பு களை பலியிடுவதற்குரிய ஒரு யாகத்தைத் தொடங்க முடிவு செய்தான். இதனை அறிந்த தட்சகன் இந்திரனிடம் ஒடிச் சென்று தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டது. தேவகுருவான பிரகஸ்பதி ஜனமேஜயனிடம் வந்து சமாதானம் சொல்லி அந்த யாகத்தை நிறுத்திவிட்டான். பாகவத புராணத்தின் சிறப்பு புராணங்களில் சிறந்தது பாகவத புராணம். எல்லா நகரங்களையும்விடக் காசி சிறந்துள்ளது போலவும், எல்லா ஆறுகளையும்விட கங்கை சிறந்துள்ளது போலவும், எல்லா தெய்வங்களையும்விட விஷ்ணு சிறந்துள்ளது போலவும், எல்லாப் புராணங்களையும் விட பாகவத புராணம் சிறந்தது. விஷ்ணு பக்தர்கள் பாகவத புராணத்தைப் படித்தும், கேட்டும் பயனடைய வேண்டும்.