பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(6. நாரத புராணம்) இப்புராணம் பற்றி. இப்புராணம் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி நாரதருக்குக் கூறப்பட்டதாகும். 2ஆம் பகுதி மாந்தாதா என்ற மாமன்னனுக்குக் கூறப்பட்டதாகும். முதற்பகுதியில் வர்ணாஸ்ரம தர்மம், ஆசாரம், சிரத்தை பிராயசித்தம் என்பவற்றைப் பற்றிப் பேசுகிறது. மேலும் வேத அங்கங்கள் ஆறு பற்றியும், சர்வதர்ஷன சங்கரகம் என்ற பெயருள்ள தத்துவங்களின் தொகுப்புப் பற்றியும் கூறுகிறது. அன்றியும் இராமன், கிருஷ்ணன், சிவன், காளி அனுமன் ஆகியவர்களின் மந்திரங்கள் பற்றியும் பேசுகிறது. இரண்டாவது பகுதி ருக்மாங்கதன் வரலாறு, பாஞ்சராத்ரா ஆகம அடிப்படையில் வைணவர்கள் மேற்கெள்ள வேண்டிய அனுஷ்டானங்கள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது. பல்வேறு சாத்திரங்களின் உட்பொருளைக் கூறுவதால் இந்தப் புராணம் மிக முக்கியமானதாகும். புராணங்களின் வளர்ச்சி, வரலாற்றை அறிவதற்கும், இப்புராணம் பயன்படுகிறது. மற்ற புராணங்களின் uuц.-16