பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பதினெண் புராணங்கள் போன்று ஒர் வாத்தியத்தைக் கையில் வைத்துக் கொண்டு இறைவன் சம்பந்தமான புகழைக் கேட்பவர் நெஞ்சுருகப் பாடிக் கொண்டு பல இடங்களிலும் சுற்றி வரலானார். பொறி புலன்களின் மூலம் பெறும் இன்பம் அப்போதைக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அது நிலை பெற்று இருப்பதில்லை. அந்த மகிழ்ச்சி முடிந்தவுடன் ஏக்கத்தையும், துன்பத்தையுமே தருகிறது. இதன் எதிராக, முடிவில்லாத ஆனந்தத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு இறைவன் புகழைப் பாடுவதுதான் சிறந்த வழி என்று நாரதர் சுட்டிக்காட்டினார். பொறி புலன்கள் மூலம் பெறும் இன்பம் உண்மையான இன்பமல்ல, அது மாயையே ஆகும். நாரதீய சம்ஹிதை நாரதீய மகாபுராணம், நாரதிய பக்தி சூத்திரம் என்பன போன்ற பல நூல்களை இவர் இயற்றினார் என்று கூறுகிறார்கள். அவருடைய வாழ்க்கையின் கொள்கை, ஒருவன் எவ்வித சந்தேகத் திற்கும் இடம் கொடாமல் முழு நம்பிக்கையுடன் இறைவன் புகழை மனமுருகிப் பாட வேண்டும், எனபதாகும. முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில், ஒரு மாபெரும் முனிவர்கள் சபை கூடியது. பிரசித்தி பெற்ற இருபத்து ஐயாயிரம் முனிவர்களுக்கு மேல் அங்குக் கூடினார்கள். இவர்களை அல்லாமல் இவர்கள் சீடர்கள் பலரும் இக்கூட்டத்தில் இருந்தனர். பரப்பிரம்மத்தைப் பற்றி ஆராய்வதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பெற்றது. கூட்டம் தொடங்குகையில் செளனகர் எழுந்து, 'நாம் கூடியிருக்கும் இடத்திற்கு அருகாமையில் மற்றொரு ஆசிரமம் இருக்கிறது. அந்த ஆசிரமத்தில் லோமஹர்ஷனர் மகன் சுதா என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேதவியாசரிடம் பயின்றவர். புராணங்களைப் பற்றி நன்கு அறிந்தவர். நாம் அவரிடம்