பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பதினெண் புராணங்கள் வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று கூறினார்கள். உடனே நாரதர், நாரத புராணத்தைச் சொல்ல ஆரம்பித்தார். நாரத புராணம் ஆதியில் பரப்பிரம்மம் ஒன்று மட்டுமே எங்கும் நிறைந் திருந்தது. அந்த பரப்பிரம்மம் வடிவமற்றது; உருவமற்றது; குணங்களல்லாதது; வருணனைக்கப்பாற்பட்டது. அந்த பரப்பிரம்மம் பிரபஞ்சத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்தது. உடனே தனது வலப் புறத்திலிருந்து பிரம்மனையும், நடுப் பகுதியில் இருந்து சிவனையும், இடப் பகுதியில் இருந்து விஷ்ணுவையும் தோற்றுவித்தது. படைத்தல் தொழிலை பிரம்மனும், அழித்தல் தொழிலை சிவனும், காத்தலை விஷ்ணுவும் மேற்கொண்டனர். மக்கள் சில சமயங்களில் மூலப் பரம்பொருளை பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று பெயர்களில் ஏதாவது ஒரு பெயராலேயே அழைக்கின்றனர். இவ்வாறு கூறுவது ஒரு மாயையாகும். பரம்பொருள்- பரப்பிரம்மத்தின் ஒரு பகுதியாக சக்தி இருக்கிறது. இச்சக்தி ஞானம் (வித்யா), அஞ்ஞானம் (அவித்யா) என இரு கூறுகளாக உள்ளன. அறிவிற் சிறந்த பெரியோர் பரப்பிரம்மத்தின் இந்த இயல்புகளைச் சிந்திக்கின்றனர். மெய்ஞ்ஞானம் என்பது பரப்பிரம்மத்திற்கும். பிரபஞ்சத்திற்கும் உள்ள ஒற்றுமையை அறிவதாகும். இந்த ஒற்றுமையை அறியாமல் இருப்பதே அறியாமை என்று சொல்லப்படும். இந்த அறியாமையே ஒருவனை எல்லையற்ற துன்பத்திற்கு ஆளாக்குவது. சக்தி ஒன்றாகவே இருப்பினும் பல பெயரிட்டு அழைக்கப்படுகிறது. விஷ்ணுவுடன் சேர்க்கும் பொழுது இலட்சுமி என்றும், சிவனுடன் சேர்த்துப் பேசும்பொழுது உமா அல்லது பார்வதி என்றும், பிரம்மனுடன் சேர்த்துப் பேசும்