பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பதினெண் புராணங்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். கங்கையில் சென்று நீராட முடியாதவர்கள் கூட கங்கா தேவியை மனத்தினால் நினைத்தாலே அவர்கள் பாவம் போய்விடும். பிரயாகை என்ற இடம் கங்கைக் கரையில் உள்ளது. இந்த இடத்தில் பிரம்மரே தவம் செய்தார் என்றால், இதன் பெருமையை அறிந்து கொள்ளலாம். பல தீர்த்தங்களில் சென்று நீராடியதன் பயனைப் பிரயாகையில் உள்ள கங்கைத் தண்ணீரின் சில சொட்டுகளே தரமுடியும். இந்தச் சில சொட்டுத் தண்ணிர் ஏனைய தீர்த்தங்களில் கிடைக்கும் புண்ணியத்தைவிடப் பதினாறு பங்கு அதிகமாகும். கங்கைக் கரையில் உள்ள களிமண்ணை எடுத்துத் தலையில் பூசிக் கொள்பவர்கள் சிவனே ஆகிறார்கள். திருமாலுக்கு மூன்று பொருள்கள் மிக முக்கியம். 1. கங்கை, 2. துளசி, 3. திருமால் அடியார்களின் பாதத் துளி. கோதாவரி, சரஸ்வதி, காளிந்தி, காவேரி, கிருஷ்ணா, ரேவா, வகுதா, துங்கபத்திரை, பீமரதி, வேத்ரவதி, தாமிரபரணி, விடத்ரு ஆகிய நதிகளிலும் கங்கை கலந்திருக்கிறாள். வஹீ விருகா என்ற மன்னனின் மகனாகிய வஹீ மிகச் சக்தி வாய்ந்த பேரரசனாவான். உலகங்களை எல்லாம் ஜெயித்துத் தன் குடைக்கீழ் கொண்டு வந்ததுடன் நில்லாமல், ஏழாகப் பிரிந்துள்ள ஒவ்வொரு துவிபத்திலும் சென்று அஸ்வமேத யாகம் புரிந்தான். தொண்ணுறாயிரம் ஆண்டுகள் அவன் ஆட்சி நேர்மையாக நடைபெற்றது. ஒருவன் அழிவிற்குக் காரணம் நான்கு என்று சொல்லப்படுகிறது. இளமை, அதிகமான செல்வம், குவிந்துவிட்ட அதிகாரம், எதிரது நோக்கும் அறிவின்மை என்ற இந்த நான்கும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆண்ட வஹீயிடம் சேர்ந்தன. ஆணவம் தலைக்