பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரத புராணம் 253 கேறியது. என்னைப்போல் இதுவரை யாரும் இருந்ததில்லை. நானேதான் கடவுள் என்று எண்ணிக் கொண்டு எல்லை மீறி நடக்கத் தொடங்கினான். லட்சுமி அவனை விட்டுப் போய்விட்டாள். பகை அரசர்கள் காலம் பார்த்திருந்தார்கள். ஹைஹய மன்னனும், தலஜங்க மன்னனும், வஹியுடன் போர் செய்து தோற்கடித்தனர். அரசை இழந்த வஹீ காட்டிற்கு ஓடினான். அவனுடைய மனைவியும் அவனைப் பின் தொடர்ந்தாள். காலங் கடந்த நிலையில் வஹீ தன் பிழைகளை நினைந்து வருந்தினான். முதுமை அவனைப் பற்றிக்கொண்டது. கடைசியாக அந்த வறுமை நிலையில் வஹீ இறந்து விட்டான். அப்போது அவன் சேர்ந்திருந்த இடம் அவுர்வ முனிவரின் ஆசிரமம் ஆகும். இறந்த கணவனுடன் அக்னிப் பிரவேசம் செய்ய அவன் மனைவி முடிவு செய்தாள். ஆனால் அவுர்வ முனிவர், "மகளே! இப்பொழுது நீ கருவுற்றிருக்கிறாய். கருவுற்ற நிலையில் உடன்கட்டை ஏறுவது கொலை புரிதலை ஒத்த பாவமாகும். உன் வயிற்றில் பிறக்கப் போகும் குழந்தை பெரிய அரசனாகப் போகிறான். ஆகவே தீப்பாயும் எண்ணத்தை விட்டுவிடு' என்று கூறினார். அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்ட யாதவி தன் எண்ணத்தைக் கைவிட்டு வஹீவிற்கு இறுதிக் கடன்கள் செய்தாள். செளதசாவின் கதை இக்கதை ஏற்கெனவே விஷ்ணு புராணத்தில் கூறப் பட்டுள்ளது. அக்கதையின் தொடர்ச்சியினை இங்கு தருகிறோம். - சாபத்தால் ராட்சசனாகி விட்ட செளதசா அலைந்து திரியும் பொழுது, நர்மதை ஆற்றங்கரையில் ஒரு முனிவரின்