பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பதினெண் புராணங்கள் கொடியேற்று விழா விரதம் கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் ஏகாதசி அன்று ஒரு கொடியை ஒரு விஷ்ணு கோயிலின் கோபுரத்தின் மேலேயோ, வெளிக் கதவின் மேலேயோ ஏற்றி வைத்து விஷ்ணு பூஜை செய்ய வேண்டும். நூற்றி எட்டு கிண்ணங்களில் பாயசம், மஞ்சள், வாலரிசி, வாசனைப் பூக்கள் ஆகியவற்றை விஷ்ணு விற்குப் படைக்க வேண்டும். இந்த விரதம் நால்வகை வருணத்தாரும், பெண்களும் மேற்கொள்ளலாம். விஷ்ணு வுடன் சேர்த்துச் சூரியன், சந்திரன், கருடன் ஆகியவர்களுக்கும் பூசை செய்யலாம். சுமதி - சத்யமதியின் கதை சத்ய யுகத்தில் சுமதி என்ற மன்னன், சத்யமதி என்ற தன் மனைவியுடன் இந்த உலகின் ஏழு பிரிவுகளையும் ஆட்சி செய்து வந்தான். நேர்மை, சத்தியம், அன்பு, விருந்தோம்பல் ஆகிய நற்பண்புகளுக்கு இவர்கள் இருவரும் உதாரணமாக இருந்தனர். துவஜா ரோகண விரதத்தை (கொடியேற்று விழா விரதத்தை) இவர்கள் விடாமல் செய்தனர். அந்த விரதத்தின் போது சத்யமதி விஷ்ணு கோயிலில் நடனம் ஆடி வந்தாள். ஒருமுறை விபண்டக முனிவர் தன் சீடர்களோடு இவர்களைப் பார்க்க வந்தார். அரசன் செய்த உபசரிப்பில் பெருமகிழ்ச்சி அடைந்த முனிவர் "உன் உபசரிப்பில் மகிழ்ச்சி அடைந்தோம். உன்னிடம் வேண்டிப் பெற வேண்டியது எதுவும் இல்லை. என் மனத்தில் தோன்றிய இரண்டு வினாக்களுக்கு நீங்கள் விடை கூறினால் போதுமானது. "நீங்கள் ஏன் கொடியேற்று விழா விரதத்தை விடாமல் செய்கிறீர்கள்? உன் மனைவி ஏன் விஷ்ணு கோயிலில் நாட்டியம் ஆடுகிறாள்?”