பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பதினெண் புராணங்கள் அவர்கள் விஷ்ணுலோகம் செல்ல வேண்டியவர்கள் என்றும் கூறினர். இறுதியில் இருவரும் விஷ்ணுலோகம் சென்று எல்லையற்ற இன்பம் அனுபவித்த பிறகு, இப்பிறவியில் சுமதியாகவும், சத்யமதியாகவும் பிறந்தனர். இதுதான் எங்கள் கதை என்று சொல்லி முடித்தான். பத்ரஷிலா முன்னொரு காலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் காலவா என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் பத்ரஷிலா என்பவன் ஜதிஸ்மராவாக அதாவது பழம்பிறப்பை அறியும் வல்லமை உடையவனாக இருந்தான். சிறு குழந்தையாக இருந்த பொழுது களிமண்ணில் விஷ்ணுவிற்குக் கோயில்கள் கட்டி, அதனை வணங்கி வந்தான். இதில் மகிழ்ச்சி அடைந்த காலவ முனிவர், "மகனே! நீ செய்யும் காரியங்களையும், மேற்கொள்ளும் விரதங்களையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். இவ்வளவு இளம் வயதில் யாரிடமும் கேட்காமல் எப்படி இந்த விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உனக்கு உண்டாயிற்று?” என்று கேட்டார். காலவ முனிவரைப் பொறுத்தவரை தம்முடைய மகனுக்கு ஜதீஸ்மரா (பழம் பிறப்பு நினைவு) ஆற்றல் உண்டு என்பது தெரியாது. எனவே தந்தையின் கேள்விக்கு விடை அளிக்கலானான். "தந்தையே! எனக்கு ஜதீஸ்மரா ஆற்றல் உண்டு. போன ஜன்மத்தில் யமனுடன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது இதை அறியலானேன். அந்தப் பிறப்பில் தர்ம கீர்த்தி என்ற பெயருள்ள அரசனாக இருந்தேன். அப்பொழுது என் குருவாக வாய்த்தவர் தத்தாத்ரேய முனிவர் ஆவார். அவர் வழிகாட்டலில் ஆட்சியைத் தொடங்கிய நான், ஒன்பதினாயிரம் வருடங்கள் ஆட்சி செய்தேன். அதிகாரம், செல்வம் சேர்ந்ததால்,