பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 பதினெண் புராணங்கள் அதைக்கேட்ட யமதர்மன் என்னை அழைத்து வந்த யமபடர் களைக் கடுமையாக ஏசினான். 'ஏகாதசி விரதம் இருப்பவர் களையும், விஷ்ணு பக்தர்களையும் இங்கு அழைத்து வராதீர்கள் என்று எத்தனை முறை உங்களுக்குக் கூறி இருக்கிறேன்” என்று கூறிவிட்டு, என்னை விஷ்ணுலோகம் அனுப்பினான். பல காலம் அங்கு தங்கி, பிறகு தங்கள் மகனாக இப்பொழுது பிறந்துள்ளேன். 'ஏகாதசி என்று தெரியாமல் அதனுடைய சிறப்புப் புரியாமல் பட்டினி கிடந்ததற்கே விஷ்ணுலோகத்தில் பல காலம் இருக்கக் கூடுமேயானால், ஏகாதசி என்று தெரிந்து விரதம் இருந்தால், எவ்வளவு சிறப்பு என்று கருதி இப்பொழுது இதனைச் செய்து வருகிறேன்” என்று பத்ரவிலா கூறவும், காலவ முனிவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். ஆனந்த மார்க்கம் இந்த உலகம் துன்பமயமானது. இந்த உலக மாயை யிலிருந்து எப்படி ஒருவன் விடுபடுவது, எப்படி வீடுபேற்றை அடைவது என்ற வினாக்களைச் சிந்திப்போர்க்குச் சுதா முனிவர் விடை தருகிறார். விஷ்ணுவே வீடுபேற்றைத் தருகிறார். விஷ்ணுவின் ஆணைக்குட்பட்டே படைத்தல் தொழிலை பிரம்மனும், அழித்தல் தொழிலைச் சிவனும் செய்கின்றனர். விஷ்ணுவிற்கு வடிவம் கிடையாது. அறத்தின் அடிப்படை அவரே ஆவார். எல்லா பூதங்களும் அவரிடம் இருந்தே தோன்றுகின்றன. அவரை வழிபடும் மனிதர்கள் தேவர்களாக மாறுகின்றனர். உண்மையான ஞானம் என்பது விஷ்ணுவே அனைத்தும் என்று அறிகின்ற ஞானம் ஆகும். இந்த வகையில் ஞானத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் உண்மையான ஆனந்தத்தைப்