பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பதினெண் புராணங்கள் கருணையே வடிவான அந்த மாபெரும் சக்தி நல்லோரைக் காக்கத் தயாராக இருக்கின்றது. 'யாதேவி! சர்வபூதேவி. என்று தொடங்கும் பாடலில், "எல்லா மனிதருடைய இதயக் கமலங்களில் தங்கி இருப்பவளான அந்த மகாசக்தியை நான் வணங்கு கிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்” என்ற ஒரு நம்பிக்கையோடு கூடிய பெரும் சக்தியை நமக்கு அளிக்கின்றது. சப்தசதி. மனிதனிடத்தில் பேராற்றல் உள்ளே மறைந்து நிற்கின்றது. உலக நன்மைக்காக ஒருவன் அதனைப் பயன்படுத்த விரும்பினால் அது வெளிவந்து தொழிற் படும். ஒருவேளை அந்த முயற்சி பயன் தரவில்லை யானால், பெண்சக்தி அதனை வெளிப்படுத்தி அந்தப் பயனைப் பெறுமாறு செய்கிறது. இந்தச் செய்தியை ஒர் உருவகமாகத் தருவதுதான் துர்க்கா சப்தசதி. ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் குறைந்தவள் அல்லள் என்பதையும், மிக முக்கியமான நேரத்தில் ஆண் சக்தி தொழிற்பட முடியாமல் திகைக்கும் பொழுது, பெண்சக்தி போரில்கூட வெளிப்பட்டு ஆண் சக்திக்கு உதவி புரியும் என்ற மாபெரும் தத்துவத்தின் உருவகக் கதையே துர்க்கா சப்தசதி ஆகும். துர்க்கையைப் பற்றி உள்ளது என்பதால் சாக்தர்கள் மட்டும் இதனைப் பாராயணம் செய் கிறார்கள் என்று சொல்லமுடியாது. சைவர்கள், வைணவர்கள்கூட துர்க்கா சப்தசதியைப் பாராயண மாகச் செய்வது, ஹோமமாகச் செய்வது என்ற பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். தசரா பண்டிகைக்கு முன்னர் 9 நாட்கள் துர்க்கையை வணங்கும் பழக்கம் இருந்து வந்தது. இப்புராணம் 137 அதிகாரங்களை உடையது.