பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பதினெண் புராணங்கள் பறவைகள் ஒருமுறை நாரதர் நந்தன கானகம் என்ற பூந்தோட்டத் திற்குச் சென்றார். அங்கே பல அப்ஸ்ரஸ்கள் நாட்டியம் ஆட இந்திரன் அதனை ரசித்துக் கொண்டிருந்தான். நாரதரைக் கண்டவுடன் அவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். அப்பொழுது இந்திரன் “இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த நாட்டியக் கலைஞர்கள். யாருடைய நாட்டியத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டான். நாரதர், “நான் வேண்டுவது மிகச் சிறந்த அழகும், நாட்டியக் கலையில் வன்மையும் உடைய ஒரு அப்ஸரஸைத் தேடுகிறேன். உங்களில் யார் இரண்டிலும் சிறந்தவர்கள்?" என்று கேட்க, அவர்கள் அனைவரும் தாம் தாம் என்று வாதிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த நாரதர் அவர்களைப் பார்த்து, நல்லது, உங்களுக்குள் முடிவு செய்ய முடியாத பொழுது நான் சொல்லும் காரியத்தை யார் நிறைவேற்றுகிறீர்களோ, அவர்கள் தான் இரண்டிலும் சிறந்தவர்கள் என்ற முடிவிற்கு வரலாம்' என்றார். அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளவே நாரதர் பேசலானார். "இமயமலையில் துர்வாசர் தவம் செய்து கொண்டிருக்கிறார். உங்களில் யார் சென்று அவருடைய தவத்தைக் கலைக்க முடியும்” என்றார். துர்வாசர் பெயரைக் கேட்டவுடன் எல்லாரும் பின்வாங்கி விட்டனர். வட என்ற அப்ஸரஸ் மட்டும் துணிந்து முன்வந்து, “நீங்கள் சொன்ன காரியத்தை நான் செய்கிறேன்" என்று சொன்னாள். அனைவரும் ஒப்புக் கொள்ளவே வட இமயமலைக்குச் சென்று துர்வாசர் தவம் செய்யும் இடத்திற்கு நேரே செல்லாமல் சற்று எட்டி இருந்து கொண்டு குயில்போல் கூவ ஆரம்பித்தாள். அந்தக் குயிலோசையைக் கேட்ட துர்வாசர் அந்தக் குரலில் ஐயம் கொண்டு பார்க்க வந்தார். வட நிற்பதையும், குயில்போல் பாடுவதையும் கண்ட அவர், “என்