பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 283 தவத்தைக் கலைப்பதற்காகவே நீ வந்துள்ளாய் என்று தெரிகிறது. பறவைபோல் பாடியதால் நீ பறவையாகப் போவாய்! பதினாறு ஆண்டுகள் கழித்து, ஒரு வேடன் உன்னைக் கொல்வான். பிறகு தேவலோகம் திரும்பி வருவாய்!” என்று சாபமிட்டார். கருடனின் பரம்பரையில் தோன்றிய கன்கா, காந்தாரா என்ற இரு சகோதரப் பறவைகள் இருந்தன! முதலில் கன்கா என்ற பறவை இமயமலை நோக்கிப் பறந்து சென்றது. அங்கே குபேரனின் பணியாளன் ஆகிய வித்யுத்’ என்ற அரக்கன் மதனிகா என்ற தன் மனைவியுடன் தனியே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். கன்கா அங்கே சென்றதும் தங்கள் சல்லாபத்திற்கு இடையூறாக இருந்ததால், வித்யுத் அப்பறவையைக் கொன்று விட்டான். தன் சகோதரப் பறவை இறந்ததை அறிந்த காந்தாரா, வித்யுத் இருக்குமிடம் வந்து பழி வாங்கும் நோக்கத்துடன் அவனுடன் போரிட்டு அவனைக் கொன்று விட்டது. உடனே அவன் மனைவி யாகிய மதனிகா ராட்சசி ஆகையால், பறவை வடிவம் எடுத்துக் கொண்டு காந்தாராவை மணந்து கொண்டது. இவர்கள் இருவருக்கும் துர்வாசரால் சபிக்கப்பட்ட வட என்ற அப்ஸரஸ் தர்ஷி என்ற பெயருடன் பெண்ணாகப் பிறந்தது. இந்த தர்ஷி என்ற பெண்ணையே துரோணர் என்ற பிராமணர் மணந்து கொண்டார். ஒருமுறை குருக்ஷேத்திரப் போர் நடைபெறும் பொழுது தர்ஷி அங்கே சென்றது. எதிர்பாராமல் அர்ச்சுனன் அம்புபட்டு தர்ஷி இறக்க நேரிட்டது. அது இறப்பதற்குள் அதன் வயிற்றில் இருந்து நான்கு முட்டைகள் பூமியில் விழுந்தன. பகுதத்தன் என்ற அரசனுடைய சுப்ரதிகா என்ற யானை அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. யானையின் கழுத்தில் கட்டி இருந்த பெரிய மணி எதிர் பாராதவிதமாக ஒர் அம்பு பட்டதால் அறுந்து கீழே