பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 285 பறவைகளும் ஆகும். ஒருநாள் இந்திரன் வயதான, பெரிய பறவை உருவம் எடுத்து அங்கு வந்தான். தனக்கு மிகவும் பசியாக இருப்பதாகவும், மனித மாமிசம் கொடுத்தால் தனக்கு மிகவும் திருப்தியாக இருக்கும் என்றும் அப்பறவை கூறியது. உடனே சுக்ரிஷா முனிவர் தம் பிள்ளைகளை அழைத்து அவர்களையே அப் பறவைக்கு உணவாகும்படிக் கூற, அந்த நால்வரும் இதை மறுத்து விட்டனர். இதனால் கடுங்கோபம் கொண்ட முனிவர், தன்னுடைய நான்கு மகன்களும் பறவை களாகப் பிறக்கும்படி சாபமிட்டு, தன் உடம்பையே பறவையாக வந்த இந்திரனுக்கு உணவாக அளிக்க விரும்பினார். இந்திரன், மன்னிப்புக் கேட்டான். சாபமிடப்பட்ட நான்கு மகன்களும் தங்கள் தந்தையை வணங்கி, தாங்கள் தங்கள் உடல் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளபடியால், தந்தை கூறியதை ஏற்க மறுத்தனர் என்றும், உண்மையான ஞானத்தைப் பெறும் பொழுது உடல் மீதுள்ள பற்று நீங்கும் என்றும் கருதி, அடுத்த பிறவியிலாவது எங்களுக்கு உண்மை ஞானம் கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முனிவரும் "அப்படியே ஆகட்டும் என்றார். அந்த நான்கு பிள்ளைகளும் இந்தப் பிறவியில் தர்ஷியின் வயிற்றில் பறவைகளாகப் பிறந்தோம். அந்த நால்வரும் நாங்களே என்று பறவைகள் சொல்ல, முனிவர், “விந்திய மலைக்குச் செல்லுங்கள்” என்று கட்டளை இட்டார். இந்த நீண்ட கதையை ஜெய்மினிக்குச் சொல்லிய மார்க்கண்டேயர், நீங்கள் சென்று அந்தப் பறவைகளைப் பாருங்கள் என்று கூறி விடை கொடுத்தார். ஜெய்மினியும் பறவைகளும் ஜெய்மினி பறவைகளைப் பார்த்து, இரண்டு கேள்வி களைக் கேட்டார்: “பஞ்ச பாண்டவர் யார்? திரெளபதி ஏன்