பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பதினெண் புராணங்கள் என்பதை அறிந்து கொண்டான். அந்தப் பெண்கள் உண்மையில் பெண்களே அல்ல. வித்யாஞானத்தின் பல கூறுகளே ஆவர். வித்யா ஞானத்தின் பல்வேறு பகுதிகளையும் உள்ளவாறு அறிந்து கொண்டு அதன் மூலம் உண்மையான ஞானத்தை அடைய விரும்பினார் எதிரிலிருந்த முனிவர் விசுவாமித்திரர். அதனால்தான் வித்யாவின் பல பகுதிகள் வெளிப்பட்டு 'எங்களைக் காப்பாற்றுங்கள் என்று முறை யிட்டன. அரிச்சந்திரனைக் கண்டதும் அவர்கள் ஒலம் நின்றது. காரணம் கடுந்தவத்தில் இருந்த விசுவாமித்திரர் மிக்க கோபமாக அப்பெண்களைப் பார்த்தவுடன் அவர்கள் அஞ்சி மறைந்து விட்டனர். பெண்கள் மறைந்தவுடன் வெட்கிப்போன அரிச்சந்திரன் விசுவாமித்திரர் கால்களில் விழுந்து, "என்னை மன்னித்து அருளல் வேண்டும். இங்கு நடந்தது ஒன்றும் தெரியாது எனக்கு. பெண்களின் அபயக் குரலைக் கேட்டு அரசன் என்ற முறையில் அவர்களைக் காக்க முன்வந்தேன்” என்று கூறினான். விசுவாமித்திரர், 'உன்மேல் எனக்கு ஒன்றும் கோபமில்லை. எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனாகிய உன்னிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்” என்றார். மேலும் விசுவாமித்திரர் மூன்று கேள்விகளைக் கேட்டார். "யாருக்கு தருமம் செய்ய வேண்டும்? யாரைக் காப்பாற்ற வேண்டும்? யாருடன் போரிட வேண்டும்?” இந்த வினாக்களுக்கு விடை கூறப் புகுந்த அரிச்சந்திரன், முதல் கேள்விக்கு பதிலாக, தவசிகட்கும், முனிவர்கட்கும், பிராமணர்களுக்கும் தானம் செய்ய வேண்டும். அஞ்சினவர் களைக் காப்பாற்ற வேண்டும். பகைவர்களிடம் போரிட வேண்டும்” என்று கூறி முடித்தவுடன், விசுவாமித்திரர், "அரசனே! நான் பிராமணன் என்பது உனக்குத் தெரியு மல்லவா? உன்னிடம் தானம் கேட்க விரும்புகிறேன்” என்று