பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 3 நதிக்கரையில் உள்ள புண்ணியத் தலங்கள் பற்றியும் இப்புராணத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. (பிரம்மம், பிரம்மன் இரண்டு பெயர்களும் முற்றிலும் வெவ்வேறானவை. பிரம்மம் என்பது மூவப் பரம்பொருளைக் குறிக்கும் சொல் பிரம்மன் எண்டது மும்மூர்த்திகளில் ஒருவராகிய நான்முகனைக் குறிக்கும். இப்புராணம் பிரமன் + புராணம் = பிரம்ம புராணம் என்று பெயர் பெற்றுள்ளது.இது குறிப்பிடுவது பிரம்மனையே என்று அறிந்து கொள்ளவும்) நைமிசாரண்ய வனம் மிகவும் வனப்பு வாய்ந்த ஒரு பகுதியாகும். பூத்துக் குலுங்கும் மரம், செடி, கொடிகள், பறந்து திரியும் பறவைகள், ஒடித் திரியும் விலங்குகள், சலசலத்தோடும் ஒடைகள் ஆகியவை நிறைந்துள்ள பகுதியாகும் நைமி சாரண்யம். யாருக்கும் உணவுப் பஞ்சமில்லாமல் இயற்கை வளங்களை வாரிக் கொடுக்கும் சிறப்புடையது நைமி சாரண்யம். இக்காரணங்களால் பல முனிவர்களும், ரிஷிகளும், துறவிகளும் இவ்வனத்தில் வாழ்ந்தனர். இயற்கை வளங்கள் நிறைந்திருந்தமையால் பல வேள்விகளும், யாகங்களும் அடிக்கடி இங்கு நடைபெற்றன. ஒருமுறை பல முனிவர்களும் கூடி ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தத் துவங்கினார்கள். இங்கே உள்ள ரிஷிகள் முனிவர்கள் போக இந்த வேள்விக்குப் பிறவிடங்களிலிருந்து, பல முனிவர்கள் வந்திருந்தனர். அவருள் வேதவியாசரின் சீடராகிய உரோம ஹர்ஷனரும் ஒருவர். இப்பெயர் சற்று மருவி லோமஹர்ஷனர் என்றும் வழங்கப் பெற்றது. பல புராணங்களை வகுத்த வேதவியாசரின் சீடர் ஆதலால் புராணங்களையும், அவற்றின் கதைகளையும் உரோமஹர்ஷனர் தம் குருவினிடம் கேட்டுத் தெளிவாக அறிந்திருந்தார்.