பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பதினெண் புராணங்கள் காரியம். வியாபாரிகளிடமிருந்து பன்னிரெண்டில் ஒரு பங்கும் விவசாயிகளிடமிருந்து ஆறில் ஒரு பங்கும் பெறுவது சரி என்று. சாஸ்திரம் சொல்லுகிறது. ஆனால், இது சரியா என எனக்குத் தெரியாது. வரி வசூலிப்பது மக்களைக் காப்பாற்றுவதற்கே யாகும். அப்படியிருந்தும் மக்களைக் காப்பாற்ற முடிகிறதா எனத் தெரியவில்லை. அப்படிக் காப்பாற்றாவிட்டாலும் நரகம் போக நேரிடும். எப்படிப் பார்த்தாலும் ஒர் அரசன் நரகம் போவது உறுதி. எனவே இந்த அரசாட்சி எனக்கு வேண்டாம்" என்று கூறினான். அங்கு இருந்த முனிவர்களில் கார்கா என்பவர், “அரசனே! நீ எதற்கும் பயப்பட வேண்டாம். தத்தாத்ரேய முனிவர் சாயா என்ற மலையில் ஒரு குகையில் வசித்து வருகிறார். தத்தாத்ரேயர் எப்படிப்பட்டவர் என்று உனக்குச் சொல்கிறேன், கேள். ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட போரில் தேவர்கள் நன்றாக அடி வாங்கினர். அவர்கள் ஒடிச்சென்று தத்தாத்ரேயரிடம் முறையிட்டனர். முனிவர் அவர்களைப் பார்த்து இன்னும் ஒருமுறை அசுரர்களோடு போரிடுங்கள். போரிட்டுக் கொண்டே தான் இருக்கும் இடத்திற்கு அவர்கள் வரும்படி செய்யுங்கள் என்று கூறினார். அவர் சொன்னபடியே தேவர்களும் அசுரர்களைப் போருக்கு அழைத்தனர். போர் நடக்கையில் அசுரர்கள் தத்தாத்ரேயர் இருக்கும் இடத்திற்கு வருமாறு செய்தனர். தத்தாத்ரேய முனிவர் மகாவிஷ்ணு அவதாரம் ஆகையால், இலக்குமி அவர் கூடவே இருந்தார். இலக்குமியைப் பார்த்ததும் போர் நடப்பதை மறந்து இலக்குமியைத் தூக்கிக் கொண்டு ஒட முயன்றனர். ஒரு பல்லக்கில் இலக்குமியை வைத்து அப்பல்லக்கைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு ஒட ஆரம்பித்தனர். முனிவரின் உத்தரவுப்படி தேவர்கள் அந்த நேரத்தில் போர் தொடுத்தனர். அசுரர்கள் யாவரும் அழிந்து விழுந்தனர். இதற்கு ஒரு காரணம்