பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 பதினெண் புராணங்கள் செய்வதறியாது மனம் பேதலித்தால், அந்த நேரத்தில் இதனுள் இருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்” என்று சொல்லிவிட்டுக் கணவனுடன் காட்டுக்குப் போய்விட்டாள். மிக்க பலவானும், அறிவாளனும் ஆகிய அலார்க்கா, மிக்க நேர்மையாகவும் மகிழ்ச்சியுடனும் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய மூத்த அண்ணன் சுவாகு காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்தான். தன் தம்பி உலக இன்பங்களில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறான் என்பதறிந்து அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க எண்ணினான். நேரே காசிராஜாவிடம் சென்று, அலார்க்காவின் ராஜ்ஜியத்தைத் தனக்குத் தருமாறு ராஜாவைச் சொல்ல வைத்தான். அலார்க்காவிற்கு சுகபோகங்களை விட்டுக் கொடுக்க மனமில்லை. எனவே மறுத்து விட்டான். இப்பொழுது காசிராஜா அலார்க்காவின் ராஜ்ஜியத்தின்மீது படையெடுத்தான். தோல்வி அடைந்த போது தாய் தந்த மோதிரம் நினைவுக்கு வர, அந்தக் س- -ٹ · எடுத்துப் படித்துப் பார்த்தான். 'ஆத்மாவின் இலக்கணம் பற்றியும், ராஜ்ஜியம், யானைப் படை, குதிரைப் படை இவையெல்லாம் மனத்தின் ஆசாபாசங்களைப் பொறுத்ததே என்றும், ஆத்மா இந்த எதனோடும் தொடர்பில்லாதது என்பதை அறிய வேண்டும் என்றும் எழுதி இருந்தது. உண்மையறிவு பெற்ற அலார்க்கா, காசிராஜாவிடம் சென்று தமயன் சுவாகுவே ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினான். - சுவாகு சிரித்துக் கொண்டே என்றுமே தனக்கு இம்மாதிரி பற்றுக்கள் இல்லை என்றும், தம்பியின் போக்கைத் திருத்தவே இந்த நாடகம் ஆடியதாகவும், தம்பி மனம் திருந்தியது கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறிவிட்டுக் காட்டிற்குப் போய்