பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 307 காசிராஜாவும் சிரித்துக் கொண்டே, சுவாகுவும் தானும் சேர்ந்து ஆடிய நாடகம் இது என்று கூறிவிட்டு, அலார்க்காவின் ராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டான். தன் நாட்டிற்குத் திரும்பி வந்த அலார்க்கா நல்ல ஞானம் கைவரப் பெற்றவனாய்ப் பந்த பாசம், அதிகார ஆசை என்பவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாய் ஆகிவிட்டான். மறுபடியும் அரசனாகும் விருப்பம் ஒருசிறிதும் இல்லாத அலார்க்கா, தன் மூத்த மகனுக்குப் பட்டம் கட்டிவிட்டுத் தவம் செய்யக் காட்டிற்குப் போய் விட்டான். இக்கதையை சுமதி சொன்னதும் அவன் தந்தை மகாமதி 'இத்தனை யாகங்களைச் செய்து நான் என்ன பயனை அடையப் போகிறேன். இந்த விநாடியே எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காடு சென்று தவம் செய்யப் போகிறேன்’ என்றான். தந்தையும், மகனும் இணைந்தே காடு நோக்கிப் புறப்பட்டு விட்டனர். இந்தக் கதைகளை எல்லாம் ஜெய்மினி முனிவருக்கு எடுத்துக் கூறிய நான்கு பறவைகளும் அமைதி அடைந்து விட்டன. ஜெய்மினியின் ஐயங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. படைப்பின் கதை ஜெய்மினி முனிவர், பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்த அந்தப் பறவைகளைப் பார்த்து, பிரபஞ்சப் படைப்பின் வரலாற்றை விளக்கமாகக் கூறுங்கள் என்று கேட்க, பறவைகள் சொல்ல ஆரம்பித்தன. (பறவைகள் சொல்லிய படைப்பு வரலாறு, பிரம்ம புராணம் முதலியவற்றில் கூறியதை அப்படியே திருப்பிச் சொல்கின்றன. ஆதலின் அதனை விரிவாகச் சொல்லாமல், கருத்தை மட்டும் لفA7% (3ay777Lقية يوم