பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பதினெண் புராணங்கள் பரப்பிரம்மம் வாக்கு, மனம், கற்பனை ஆகியவற்றைக் கடந்திருப்பது. வடிவோ உருவோ இல்லாமல் எங்கும், எல்லா வற்றிலும், எப்பொழுதும் ஊடுருவி நிற்பது. தொடக்கமோ முடிவோ இல்லாதது. குணம், குறி கடந்தது. தொடக்கத்தில் எங்கும் தண்ணிர்- அதில் ஒரு பெரிய முட்டை வளர்ந்து கொண்டே வருதல்- அதனுள் பிரம்மன் தோன்றுதல்- பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் அதனுள் இருத்தல்- முட்டையினுள் இருந்து வெளியே வந்த பிரம்மன் புல் பூண்டு முதல் ஜடப் பொருள்களையும், புழு, பறவை, பாம்பு, மிருகங்கள் அனைத்தையும் படைத்தல்-இச்சா மாத்திரையாய் பிருகு, அத்ரி முதலிய ஒன்பது முனிவர்களைப் படைத்தார். வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றைத் தமது நான்கு முகங்களாகப் படைத்தார்- நீரில் உறங்குவதால் நாராயணன் என்ற பெயர் பெறுதல்- ருத்ரன் பிரம்மன் மடியில் தோன்றுதல், பெயர் வேண்டி அழுதல், ருத்ரன் என்று பெயர் பெறுதல். வருதினியின் கதை வருணா நதிக் கரையில் உள்ள அருணஸ்பதா என்ற ஊரில் ஒரு பிராமண இளைஞன் இருந்தான். வேத சாஸ்திரங் களில் வல்லவனாய் இருந்ததோடு, அழகிய அஸ்வினிகளைவிட அழகனாக இருந்தான். இவ்வளவு இருந்தும் அந்த இளைஞன் மனத்தில் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுதியாக இருந்தது- அந்த இளைஞனை நாடி மற்றொரு பிராமணன் விருந்தினனாக வந்தான். வந்தவன் உலகின் பல்வேறு பாகங்களில் தான் கண்ட காட்சிகளை எல்லாம் வருணித்தான். அதைக்கேட்ட இந்த இளைஞன், “உன்னைப் பார்த்தால் இளைஞனாகத்தானே தெரிகிறாய்! அப்படி இருக்க