பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 309 இந்த வயதிற்குள் எப்படி உன்னால் இத்தனை இடங்களையும் பார்க்க முடிந்தது?” என்று கேட்டான். வந்தவன் மூலிகைகள், மந்திர உச்சாடனம் என்பவற்றில் தான் கைதேர்ந்தவன் என்றும், குறிப்பிட்ட சில மூலிகைகளைக் காலில் தடவிக் கொண்டால் ஒரு விநாடி நேரத்தில் எத்தனை தூரமாக இருந்தாலும், விரும்பிய இடத்திற்குப் போய்ச் சேரலாம் என்றும் கூறினான். அவ்வாறு சொல்லியதோடு மட்டுமல்லாமல், விருந்தினனாக வந்த அவன் இந்த இளைஞன் காலில் பல மூலிகைகளைத் தேய்த்து விட்டான். இந்த இளைஞன் இமய மலைக்குச் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில், தான் இமயத்தின் உச்சியில் நிற்பதைக் கண்டான். அங்குள்ள செடி, கொடிகள், மரங்கள், அருவிகள், ஓடைகள் என்பவற்றைப் பார்த்துத் தன்னை மறந்து நின்றான். நின்ற இடம் பனிக் கட்டியும் ஈரமும் இருந்த இடம் ஆதலின், மெல்ல அவன் காலில் தேய்த்திருந்த மூலிகைகள் கரைந்து ஒடிவிட்டன. அதை அறியாத இளைஞன் மாலை நேரத்தில் தன் ஊருக்கு வரவேண்டும் என்று நினைத்தான். காலில் மூலிகை இல்லாததால் அவனால் எங்கும் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், அவன் அழகைக் கண்டு மயங்கிய வருதினி என்ற அப்சரஸ் அவனை நாடி தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால் இந்தப் பிராமணன் அவள் அன்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. பழைய முறையில் ஆகாய மார்க்கமாக வர முடியாதாகையால், அக்னி தேவனை வேண்டி, அவன் உதவியால் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். அவன் போய்விட்டாலும் அவனையே நினைந்து மெலிந்த வருதினி அந்த வனத்திலேயே தங்கி விட்டாள். முன்னர் அவளால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட கலி என்ற