பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பதினெண் புராணங்கள் அவர், 'நீ ராட்சசனாகத் திரியும் பொழுது உன் மகள் என்று தெரியாமலேயே அவளைப் பிடித்துத் தின்ன முற்படுவாய். அந்த விநாடியில் உனக்கு விடுதலை கிடைக்கும் என்று விமோசனம் தந்தார். இப்பொழுது இவள் என் கையில் சிக்கியவுடன் என் சாபம் தீர்ந்து விட்டது. தயைகூர்ந்து என் மகளை நீ திருமணம் செய்து கொள்” என்று கூற, ஸ்வரோச்சா அதற்குச் சம்மதித்தான் என்றாலும் மனோரமா, "என் தோழிகள் இருவரும் இந்தப் பரிதாபமான நிலையில் இருக்கும் பொழுது நான் மட்டும் எப்படி மணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கமுடியும்?” என்றாள். அதைக்கேட்ட ஸ்வரோச்சா மனோரமாவின் தந்தையான இந்திவராவிடம் கற்றுக்கொண்ட ஆயுர்வேதத்தைப் பயன்படுத்தி, அவள் தோழிகள் இருவரையும் குணப்படுத்தினான். பின்பு மூவரையும் திருமணம் செய்து கொண்டான். இம் மூவருள் விபவரி உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பேசும் மொழியை அறிந்தவளாதலின், அக்கலையை அவனுக்குக் கற்றுக் கொடுத்தாள். இரண்டாவது மனுவின் கதை மூன்று மனைவிகளுடன் வாழ்ந்த ஸ்வரோச்சா, மனோரமாவின் மூலமாக விஜயன் என்ற மகனையும், விபவரியின் மூலமாக மேருநந்தா என்ற மகளையும், கலாவதி மூலமாகப் பிரபதா என்ற மகனையும் பெற்றான். இம் மூவரும் பருவம் அடைந்தவுடன் ஸ்வரோச்சா தன் மூன்றாவது மனைவி கலாவதியிடம் கற்றுக் கொண்ட பத்மினி சக்தியைப் நாள் ஸ்வரோச்சா வேட்டையாடச் சென்றபொழுது ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திச் சென்று அதன்மேல் அம்பு எய்கையில், ஒரு மான் எதிரே வந்து, ஸ்வரோச்சா! அதன்