பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 313 மேல் அம்பை எய்யாதே! என் மேல் எய்து என்னைக் கொன்றுவிடு' என்றது. ஆச்சரியம் அடைந்த ஸ்வரோச்சா, "நீ யார்? நான் ஏன் உன்னைக் கொல்ல வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்த மான், நான் உன்மேல் அளவற்ற காதல் கொண்டுள்ளேன்' என்றது. ஸ்வரோச்சா சிரித்துக் கொண்டே “ஒரு மனிதன் மானை எப்படி மணம் புரிய முடியும்?” என்றான். அதற்கு அந்த மான், "உனக்குச் சந்தேகம் இருந்தால் என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்” என்றது. மான் சொன்னபடியே ஸ்வரோச்சா அதனைக் கட்டிப் பிடித்தான். உடனே அது அழகிய பெண்ணாக மாறிற்று. நான் இந்த வனத்திற்கு அதிதேவதை. என்னை மணந்து கொள் என்று கூறியவுடன் ஸ்வரோச்சா நான்காவது மனைவியாக அப் பெண்ணை ஏற்றுக் கொண்டான். நாளடைவில் அவ்விரு வருக்கும் ஒர் அழகான குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்த பொழுது கந்தர்வர்கள் பாடினார்கள். அப்ஸரஸ்கள் ஆடினார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். அக்குழந்தை உடம்பிலிருந்து பரவிய ஒளி எட்டுத் திக்கும் பரவிச் சென்றது. குழந்தைக்கு தையூதிமனு என்று பெயர் இட்டனர். இக் குழந்தை ஸ்வரோசிஷா மன்வந்திரத்தின் தலைவன்ாக, இரண்டாவது.மனுவாக உள்ளவன் ஆவான். மூன்றாவது மனுவின் கதை துருவனின் தந்தையான உத்தானபாதன், சுருச்சி என்ற இரண்டாவது மனைவி மூலம் பெற்ற பிள்ளை உத்தமன் ஆவான். மிக்க பராக்கிரமசாலியும், நற்பண்புகளும் உடைய உத்தமன் மனைவி வகுளா என்பவள் ஆவாள். உத்தமன் மனைவியைப் பெரிதும் நேசித்தாலும், வகுளா அவனை அவ்வளவு நேசிக்கவில்லை. அவன் எவ்வளவு பரிசுகள் தந்தாலும் அவள் அதனால் திருப்தி அடையவில்லை. ராஜ