பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 315 முகத்தைப் பார்த்துவிட்டு, 'அதற்குத் தேவையில்லாத பாத்திரம் இது என்று கூறிவிட்டுப் போய்விட்டான். இருந்தாலும் முனிவர் அரசனை அமரச் செய்து வந்த விஷயம் என்ன என்று விசாரித்தார். முனிவர், “முக்காலமும் அறிந்தவன் நான். என் சீடனுக்கும் இதைச் சொல்லிக் கொடுத் திருக்கிறேன். உன் வாழ்க்கை முழுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. அதனால்தான் உன் முகத்தைப் பார்த்து, 'உபசரிப்புக்குத் தகுதியில்லாதவன் நீ என்று கூறிவிட்டான். இருந்தாலும் உன்னைப் பற்றிக் கவலை கொள்ளாமல் பிராமணன் மனைவியைத் தேடி வந்திருக்கிறாய். ஆதலால் உனக்கு உதவ வேண்டியது என் பொறுப்பாகிறது. வலகா என்ற ராட்சசன், உட்பலவதா என்ற காட்டில் அவளை ஒளித்து வைத்திருக்கிறான். நீ சென்று அவளை மீட்டுப் போ” என்று கூறிவிட்டார். அசுரன் இருக்குமிடத்தை நாடிச் சென்றான் உத்தமன். அந்த ராட்சசன் அரசனைக் கண்டதும் விழுந்து வணங்கி, “அரசே! என் இருப்பிடம் தேடி வந்த காரணம் யாது?’ எனக் கேட்டான். உத்தமன், “நீ பிராமணன் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்திருக்கிறாய். அவளைத் தின்னப் போகிறாயா? அல்லது மணம் செய்து கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டான். அதற்கு ராட்சசன், “அரசே! நீங்கள் நினைப்பது போல் நரமாமிசம் தின்னும் ராட்சசன் அல்ல நான். பிராமணன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. அழகான மனைவியர் பலர் எனக்கிருக் கின்றனர்” என்றான். உத்தமன், "அப்படியானால் இவளை ஏன் சிறைப்பிடித்தாய்?" என்று கேட்க, அரக்கன், “அரசே! எனக்கு அதீத சக்திகள் பல உண்டு. ஒருவரைக் கண்டால் அவரிடம் உள்ள தீய குணங்களை எல்லாம் உறிஞ்சி விடுவேன். அந்தப் பிராமணப் பெண்ணின் தீய குணங்களை