பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 317 ஒப்படைத்தான். பேச்சை இழந்துவிட்ட கபோதகன் மகள் நந்தாவை மறுபடியும் பேச வைப்பதற்காக பிராமணனைக் கொண்டு யாகம் செய்வித்து, பேசுமாறு செய்தான். உடனே அந்தப் பெண் வகுளாவிற்கு வரம் தந்தாள். “உன் வயிற்றில் மூன்றாவது மனுவாகப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்யப் போகும் ஒர் அழகிய மகன் பிறப்பானாக!” என்று கூறிவிட்டுப் போய்விட்டாள். காலாந்திரத்தில் உத்தமனுக்கும் வகுளாவிற்கும் 'ஒளத்தமா' என்ற மகன் பிறந்தான். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அவனே மூன்றாவது மனுவாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டான். அவன் காலத்தில் இந்திரப் பதவி வகித்தவன் சுஷந்தி என்று அழைக்கப்பட்டான். நான்காவது மனுவின் கதை முன்னொரு காலத்தில் மிக்க பராக்கிரமம் வாய்ந்த சுவரஷ்டிரா என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவனுக்கு மட்டும் நீண்ட ஆயுள் இருந்ததே தவிர, அவன் நூறு மனைவிமார், அமைச்சர்கள் ஆகிய யாவரும் காலாந்திரத்தில் இறந்து விட்டனர். தனியாக விடப்பட்ட மன்னனுடைய சக்தியும் குறையலாயிற்று. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வியர்தா என்ற பகை மன்னன் போரில் இவனைத் தோற்கச் செய்து, இவன் நாட்டையும் எடுத்துக் கொண்டான். எல்லாவற்றையும் இழந்த சுவரஷ்டிரா காட்டில் தவம் புரியலானான். மழைக் காலத்தில் வெட்ட வெளியில் நின்று தவம் செய்யும் பொழுது, பல நாட்கள் ஒயாது மழை பெய்து, பெருவெள்ளம் வந்தது. அந்த வெள்ளம் அடித்துச் செல்ல நடு வெள்ளத்தில் அகப்பட்ட அவன் மிகவும் கவலைப் பட்டான். அவ் வெள்ளத்தில் ஒரு மான் வர, அதன் வாலைப்