பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 319 பிறந்துள்ளது?’ என்றார். கார்க முனிவர், 'ரிதவக் முனிவரே! இப்பிள்ளை இப்படி இருப்பதற்கு நீங்கள் சொல்லிய எதுவும் காரணமன்று. அவன் பிறந்த பொழுது, விண்ணில் ஆட்சி செலுத்திய ரேவதி நட்சத்திரம்தான் அந்தக் கோளாறுக்குக் காரணம்” என்றார். அதைக் கேட்ட ரிதவக் முனிவர் "இப்படித் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரேவதி நட்சத்திரம், ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து விடட்டும்” என்று சபித்தார். அதிசயத்திலும் அதிசயம் அனைவரும் பார்த்துக் கொண் டிருக்கும் பொழுதே ரேவதி நட்சத்திரம் குமுத மலையின் மேல் விழுந்தது. அதனால் அம்மலையும், அதைச் சுற்றியுள்ள பிராந்தியமும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியது. இந்த இடத்தில் புதிய தாமரைக் குளங்கள் தோன்றலாயின. அதனால் அந்த இடம் ரைவதக என்று பெயர் பெற்றது. இந்தக் குளங்களில் உள்ள தாமரையில் இருந்து ரேவதி என்ற அழகான பெண் வெளிவந்தாள். பிரமுச்சா என்ற முனிவர் அவளை வளர்த்து வந்தார். அவள் மணப் பருவத்தை அடைந்தவுடன், அவளுக்கு ஏற்ற கணவனைத் தேட விரும்பினார் முனிவர். அக்னி தேவனை அழைத்து தன் மகளுக்கு ஏற்ற மணாளன் யார் என்று கேட்டார். "துர்கமா’ என்ற மன்னன் எல்லா விதத்திலும் ரேவதிக்கு ஏற்றவன்” என்று கூறினான், அக்னி. இது நடைபெற்ற சில நாட்கள் கழித்து துர்கமா என்ற மன்னனே வேட்டையாட வந்தான். பிரமுச்ச முனிவரின் ஆசிரமத்தில் நுழைந்தான். அவனைக் கண்ட முனிவர் தன் பெண்ணின் கதையைச் சொல்லி, அக்னி தேவன் கூறியதைச் சொன்னார். மன்னன் மணம் புரிய ஒப்புக் கொண்டான். ரேவதி ஒர் ஒப்பத்தக்க வரையறை விதித்தாள். அதன்படி கீழே விழுந்த ரேவதி நட்சத்திரம் பழையபடி ஆகாயத்தில்