பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 321 நான் வளர்ந்தவுடன் தாய் என்ற முறையில், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கப் போகிறாய். உலகத்தில் உள்ள அனைவரும் சுயநலவாதிகளே தவிர வேறு இல்லை.” இதைக் கேட்ட பத்ரா மிக்க கோபத்துடன் குழந்தையைக் கீழே போட்டு விட்டு அப்பால் சென்றுவிட்டாள். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த ஜதஹர்ணி பிசாசு, இக்குழந்தையைத் தூக்கிச் சென்று, விக்ரந்தா மன்னனின் மனைவியின் பக்கத்தில் இருக்கும் குழந்தைக்குப் பதிலாக இந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு, மன்னனின் குழந்தையை எடுத்துச் சென்றது. அக்குழந்தையை ஒரு பிராமணன் வீட்டில் போட்டுவிட்டு, பிறந்த குழந்தையினை எடுத்துத் தின்ன ஆரம்பித்தது. இது மாதிரி காரியங்களை இப்பிசாசு அடிக்கடி செய்து வந்தது. விக்ரந்த மன்னன் தன் மனைவியின் பக்கத்தில் இருந்த குழந்தையைத் தன் குழந்தை என்று நினைத்து, ஒரு சத்திரியக் குழந்தைக்கு வேண்டிய அனைத்தையும் செய்தான். ஆனந்தன் என்று பெயரிட்டான். குழந்தை ஆனந்தனுக்கு ஒரு குரு நியமிக்கப்பட்டார். முதல் நாள் அந்த குரு ஆனந்தனைப் பார்த்து, “முதலில் உன் தாய் தந்தையருக்கு வணக்கம் சொல்லி வா” என்று கூறினார். ஆனந்தன் சிரித்துக்கொண்டே “எந்தத் தாய், தந்தையரை வணங்குவது? பெற்றவர்களையா அல்லது வளர்த்தவர்களையா?” என்று கேட்டான். குரு குழப்பம் அடைந்தார். ஆனந்தன் நடந்தவற்றைக் கூறினான். அரசனுடைய உண்மையான குழந்தை பிராமணன் வீட்டில் வளர்கிறது என்று கூறினான். இந்தச் சிக்கலை எப்படித் தீர்க்கலாம் என்று குரு கவலைப்பட்ட பொழுது பிராமணன் வீட்டில் வளரும் ஷைத்ரா என்ற பையன்தான் உண்மையான அரசகுமாரன் என்று சொன்னான். மேலும், ஷைத்ராவைக் கொண்டு வந்து அரசனிடம் சேர்த்து விட்டு, முனிவர் 31سبل لt