பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 பதினெண் புராணங்கள் மகனாகிய தான் தவம் செய்யக் காட்டுக்குப் புறப்பட்டான். பிரம்மன் எதிரே வந்து, அவனைத் தடுத்து, “நீ காட்டிற்குப் போகக் கூடாது. சக்oச மனு என்ற பெயருடன் இந்த உலகை ஆள வேண்டும். இந்தக் காலகட்டத்திற்கு சக்oச மன்வந்திரம் என்ற பெயர் ஏற்படும்” என்று கூறினான். ஆனந்தன் இதை ஏற்றுக் கொண்டு, மன்னன் உக்கிரனுடைய மகளாகிய விதர்பாவை மணந்து உலகை ஆட்சி செய்தான். இந்த சக்oச மனுவின் காலத்தில் இருந்த இந்திரனுக்குப் பெயர் மனோஜலா எனபதாகும. ஏழாவது மனுவின் கதை வைவஸ்வத மனுவின் கதை முன்னரே புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சாயாவுக்குப் பதிலாக இப்பொழுது சம்ஜனாவே மறுபடியும் சூரியனிடம் வந்து விட்டாள். இருந்தாலும், சூரியனுடைய மிகுதியான சக்தி அவளை வருத்தியது. அவளுடைய தந்தையாகிய விஸ்வகர்மா அவள் தாங்குமளவிற்குச் சூரியனின் ஆற்றலைக் குறைத்தார். அதிகப்படியாக சூரியனிடமிருந்து பெற்ற ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி சிவனுக்குரிய திரிசூலமாகவும், விஷ்ணுவின் சக்கரமாகவும், அஷ்டவசுக்களுக்கும், சிவனுக்கும், அக்னிக்கும், சக்திகளாகப் பெற்றுக் கொடுத்தார். இவை அனைத்தும் போக எஞ்சிய சக்தியைப் பல தெய்விக ஆற்றல்களாகவும், குபேரனுக்குரிய பல்லக்காகவும் செய்து தந்தார். இப்பொழுது நடைபெறும் வைவஸ்வத மனுவின் மன்வந்திரத்தில் இந்திரனுக்கு உருஜஸ்வி என்பது பெயராகும். ஒவ்வொரு கர்ப்பத்திலும் பதினான்கு மனுக்கள் தோன்றுவர். அவர்களுடைய காலம் மன்வந்திரம் எனப்படும்.