பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 333 பிரபஞ்சப் படைப்பு ஆதியில் தோன்றிய பிரம்மன் தனது வலக்கைச் சுண்டு விரலில் இருந்து தட்சனையும், இடக்கைச் சுண்டு விரலில் இருந்து தட்சன் மனைவியையும் உண்டாக்கினார். தட்சன் மகளான அதிதி, காசிப முனிவரை மணந்து, மார்த்தாண்டா என்ற பெயருடன் துரியனைப் பிள்ளையாகப் பெற்றார்கள். பிரபஞ்சத் தொடக்கத்தில், பிரம்மாண்டமாகிய முட்டையி லிருந்து பிரம்மனுடன் சேர்ந்தே சூரியனும் உடன் தோன்றி னான். அவனுடைய வெப்ப மிகுதியால் பிரம்மன் படைப்புச் சீர் குலைந்தது. செடி கொடிகள் கருகின. தண்ணீர் ஆவியாகப் போய்விட்டது. இவை இரண்டும் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாதாகையால், பிரம்மன் சூரியனைக் குறித்துத் தவம் இயற்றினான். மனம் இரங்கிய சூரியன் தன் சக்தியைக் குறைத்துக் கொண்டான். நீர் வந்தது. செடி கொடிகள் வந்தன. விலங்குகள் தோன்றின. பின், மனிதனும் தோன்றினான். பிரம்மனே தேவர்களையும், அவர்களுக்கெதிரான தைத்திரியர் களையும், நாகர்களையும் படைத்தான். பிரம்மாவின் மற்றொரு பிள்ளை மாரீச்சி. மாரீச்சியின் மகனே காசிபன். காசிபன் தட்சனுடைய பதின்மூன்று பெண் களை மணந்தான். அதிதியின் மக்களாகிய அதித்தியர்களுக்கும், திதியின் மக்களாகிய தானவர்களுக்கும் போர் நடந்தது. அதிதி சூரியனை வேண்டி, மார்த்தாண்டா என்ற சூரியனையே மகனாகப் பெற்றுத் தைத்திரியர்களை வென்றனர். முன்னொரு காலத்தில் ராஜ்யவர்த்தனா என்ற மன்னன் நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்தான். அவன் அரசாட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். நாட்டில் பஞ்சம் நோய் எதுவுமின்றி மக்கள் வாழ்ந்தனர். அரசன் ஏழாயிரம் ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.