பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்க்கண்டேய புராணம் 335 இருக்கப் போகிறார்கள்! என் அருமை மனைவி, பிள்ளைகள், என் குடிமக்களாகிய நீங்கள் ஆகிய ஒருவரும் அவ்வளவு காலம் இருக்கப்போவதில்லை. நீங்களெல்லாம் இறந்த பிறகு நான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்?” என்றான். பிராமணர்கள் வாயடைத்து நின்றனர். இதற்கு ஒரு வழி செய்கிறேன் என்று கூறிய மன்னன், மனைவியை அழைத்துக் கொண்டு காமரூபத்தில் உள்ள சூரியன் கோயிலுக்குச் சென்று ஒரு வருடம் உணவு முதலியவற்றை நீக்கித் தவம் இருந்தான். சூரியன் நேரே வந்தவுடன், ‘ஐயனே! தங்கள் வரப்படி நான் மட்டும் உயிரோடு இருந்து என்ன பயன்? என் மனைவி, மக்கள், குடிமக்கள் ஆகிய அனைவரும் என்னுடன் சேர்ந்து இன்னும் பதினாயிரம் ஆண்டுகள் வாழும்படி வரம் தர வேண்டுகிறேன்” என்றான். சூரியனும் அப்படியே ஆகட்டும்' என்றான். மார்த்தாண்டனின் பரம்பரையில் வந்த கரந்தமா என்பவனுக்கும், அவன் மனைவி கிரா என்பவளுக்கும் பிள்ளையாகப் பிறந்தான் அவிட்சிதா, இவனுடைய மகன் மருத்தா என்பவனாவான். மருத்தாவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அவிட்சிதா தவம் ஏற்கப் போய்விட்டான். ஒருநாள் மருத்தாவிடம் சில முனிவர்கள் வந்து, “அரசே! எங்கள் ஆசிரமம் இருக்கும் இடத்தில் பாம்புகள் தொல்லை மிகுதியாக உள்ளன. அவற்றைக் கொல்லும் சக்தி எங்களிடம் உள்ளது என்றாலும் முனிவர்களாகிய நாங்கள் உயிர்களைக் கொல்லக்கூடாது. எங்களைக் காப்பது அரசனுடைய கடமை” என்று கூறினார்கள். அதைக்கேட்ட அரசன் தக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சென்று பாம்புகளை எல்லாம் கொன்று தீர்த்தான். சில பாம்புகள் ஒடிச்சென்று மருத்தாவின் தந்தை