பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(8. அக்னி ITF) இப்புராணம் பற்றி. அக்னியால் வசிட்ட முனிவருக்கு உபதேசிக்கப் பட்டது இப்புராணம். ஆனால் புராணத்தினுள் சுதா முனிவர் சௌனகர் மற்றும் ரிஷிகளுக்கும் சொல்லிய தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாகம், அக்னியின் பெருமை, விஷ்ணு அவதாரங்கள், சிவபெருமானை நோக்கிச் செய்யும் ஞானபூஜை, பிரபஞ்ச லட்சணம், தர்மசாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், வானியல், சாமுத்ரிகா லட்சணம், ராஜநீதி, ஆயுர்வேதம், வாஸ்துவித்யா, தாந்திரீக வித்தைகள், மந்திர சாஸ்திரங்கள், தனுர்வேதம், நாட்டிய சாஸ்திரம், காவிய சாஸ்திரம், புராண சாஸ்திரம் முதலானவை பேசப் பட்டுள்ளன. 8000 கிரந்தங்களை உடையது. நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலிய ரிஷிகள் கூடியிருந்தனர். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த சுதா அங்கு வந்து சேர்ந்தார். மற்ற முனிவர்கள் சுதாவைப் பார்த்து, 'மனிதர்களுக்குப் பிரம்மஞானத்தைத் தருவது எது? மிகச் சிறந்த பொருள் எது?’ என்று வினவினார். 22---هلسنL