பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 பதினெண் புராணங்கள் சுதா சொல்லத் தொடங்கினார்: “நான் ஒருமுறை சுகர், பைலா மற்றும் பல முனிவர்களோடு சேர்ந்து வத்ரிகா ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வியாச முனிவரைச் சந்தித்தேன். நீங்கள் கேட்கும் இதே கேள்விகளை வியாச முனிவரிடம் கேட்டேன். அக்னி பகவானிடமிருந்து வசிட்டர் தாம் கேட்டதை வியாச முனிவருக்குச் சொல்ல, வியாச முனிவர் எங்களுக்குச் சொன்னதை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மிகச் சிறந்தது என்பது விஷ்ணுவே ஆகும். அக்னி புராணம் மிகச் சிறந்தது என்பதற்குக் காரணம், பரப் பிரம்மத்தின் சாரத்தை நன்கு எடுத்துக் கூறுகிறது. ஆகவே, வியாசர் மூலம் நான் அறிந்த அக்னி புராணத்தை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். 参 叠 அவதாரம் என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? விஷ்ணு பல சமயங்களில் இந்த பூலோகத்திற்கு வந்து மனிதர்களாகவும், பிறவாகவும் தோன்றுகிறார். இதைத்தான் அவதாரங்கள் என்று சொல்லுகிறோம். ஏன் இப்படி விஷ்ணு அவதாரங்கள் எடுக்க வேண்டும்? உலகத்தில் துன்பம் விளைவிப்பவர்கள், கொடியவர்கள் ஆகியவர்களை அழித்து, நல்லவர்களையும், தர்மத்தையும் நிலைநாட்டவே அவதாரங்கள் தோன்றுகின்றன. விஷ்ணு இதுவரை எடுத்தவை ஒன்பது அவதாரங்கள் ஆகும். பத்தாவது அவதாரம் எதிர்காலத்தில் தோன்றப் போவதாகும். விஷ்ணு இதுவரை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், கிருஷ்ணன், புத்தன் ஆகிய அவதாரங்கள் எடுத்துள்ளார். இனி வரப் போவது கல்கி அவதாரம் ஆகும்.