பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 339 1. மச்ச அவதாரம் அக்னி, வசிட்டரிடம் அவதாரங்கள் பற்றிச் சொல்லிய தாவது: வைவஸ்வத மனு வத்ரிகா ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். கிருத்தமாலா என்ற நதிக்குச் சென்று, தூய்மைப் படுத்திக்கொண்டு அர்க்கியம் செய்வதற்காக இரண்டு கைகளிலும் நீரை எடுத்துக் கொண்டார். கைக்குள் இருந்த தண்ணிரில் ஒரு சிறிய மீன் இருந்தது. ஆற்றுக்குள் போட வேண்டும் என்று மனு நினைத்தவுடன், அந்த மீன் பேசத் தொடங்கியது: “சிறிய மீனாகிய என்னை மறுபடியும் ஆற்றில் விட்டு விடாதே! பெரிய மீன்களும், முதலைகளும் என்னை விழுங்கிவிடும். என்னை ஒரு தனி இடத்தில் வைத்து வளர்ப்பாயாக’ என்று கூறியது. இதைக் கேட்ட மனு, அந்த மீனை ஒரு பாத்திரத்தில் வைக்க உடனே அந்த மீன் பெரிதாக வளர்ந்து கொண்டே போனது. வேறு எதிலும் அதனை வைக்க முடியாது என்று கருதிய மனு, ஒரு குளத்தில் சென்று மீனை விட்டார். உடனே மீன் மேலும் பெரிதாக வளர்ந்து குளத்தை விடப் பெரிதானது. இறுதியாகக் கடலில் கொண்டு விட்ட பொழுது அது மேலும் பெரிதாக வளர்ந்து மிகப் பெரிய அளவாக இருந்தது. இதைக் கண்ட மனு, “நீ யார்? நீ விஷ்ணுவாகத்தான் இருக்க முடியும். எதற்காக இவ்வுருவில் வந்திருக்கிறாய்?" என்று கேட்டான். “இவ்வுலகில் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தவே நான் வந்திருக்கிறேன். இன்னும் ஏழு நாட்களில், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு இவ்வுலகம் முழுவதும் நீரால் நிரம்பி விடும். உயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். நீ என்னைக் காப்பாற்றியதால், உனக்கு உதவி புரிகிறேன். உலகம் முழுவதும் நீரில் மூழ்கும் சமயத்தில் ஒரு படகு இங்கு வரும். நீ உன்னுடன் ஏழு ரிஷிகளையும் அழைத்துக் கொண்டு பயங்கரமான அந்த இரவைப்